For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி ரிஷப் பண்ட்! நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. கெத்து காட்டிய தினேஷ் கார்த்திக்

பிரிஸ்பேன் : இந்திய அணியில் தோனியின் இடத்தை பிடிக்க ரிஷப் பண்ட் கடும் முயற்சியில் இருக்கிறார்.

அவருக்கு போட்டியாக இருக்கும் ஒரே வீரர் தினேஷ் கார்த்திக் மட்டுமே. தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க வாய்ப்பு குறைவு. ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவருக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய முதல் டி20 போட்டியில் ரிஷப் பண்ட்டை விட அதிரடியாக ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தினேஷ்.

தோனிக்கு மாற்று வீரர்கள்

தோனிக்கு மாற்று வீரர்கள்

தோனிக்கு மாற்றாக அணியில் இருப்பவர்கள், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் அதிரடி வீரர் என பெயர் பெற்றவர். தினேஷ் கார்த்திக் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்வார்.

இருவருக்கும் மறைமுக போட்டி

இருவருக்கும் மறைமுக போட்டி

இவர்கள் இருவருக்கும் இடையே அணியில் இடம் பிடிப்பது யார் என்ற போட்டி மறைமுகமாக இருக்கக்கூடும். ஆனால், நேற்று களத்தில் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது, ஒருவருக்கொருவர் சளைக்காமல் அதிரடியாக ஆடினர்.

ரிஷப் - தினேஷ் சேர்ந்து ஆடினர்

ரிஷப் - தினேஷ் சேர்ந்து ஆடினர்

நேற்றைய போட்டியில் இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 11.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. அப்போது ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

பின்தங்கிய ரிஷப் பண்ட்

பின்தங்கிய ரிஷப் பண்ட்

அப்போது ரிஷப் அதிரடியாக ஆடுவார். தினேஷ் கார்த்திக் அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்று தான் பலரும் நினைத்து இருந்தனர். ஆனால், தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். ரிஷப் பண்ட்டால் குறைந்த பந்துகளில் எளிதாக பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. ஆனால், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். அதே நேரத்தில் ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவர்கள் இருவரும் 3.5 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்து அணியை ஓரளவு மீட்டனர். ஆனால், ரிஷப் பண்ட் தேவையற்ற ஷாட் ஆடி அவுட்டானார்.

அதிரடியாக ஆடி நிரூபித்த தினேஷ் கார்த்திக்

அதிரடியாக ஆடி நிரூபித்த தினேஷ் கார்த்திக்

அதன் பின் இந்தியா கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. எனினும், இந்த போட்டியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் யார் சிறந்தவர் என்பதை நேரடியாக கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பில் தன்னை நிரூபித்துள்ளார். ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்தார் என ரசிகர்கள் கூறி வருவதால் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

Story first published: Thursday, November 22, 2018, 15:09 [IST]
Other articles published on Nov 22, 2018
English summary
Rishab Pant or Dinesh Karthik - a real fight at first T20 match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+