டக் அவுட்டிலும் சாதனை படைத்த ரிஷப் பந்த்
சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 273 ரன்களை குவித்து முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது இரண்டாவது டெஸ்டில் மோசமான ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். அவர் 29 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 46 நிமிடங்கள் களத்தில் இருந்து 29 பந்துகளை சந்தித்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்னால் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக 29 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அந்த சாதனையை சமன் செய்துள்ளார் ரிஷப் பந்த்.
டெஸ்ட் போட்டிகளில் இது போன்ற சா(சோ)தனையை நிகழ்த்திய மற்ற இந்திய வீரர்கள் விவரம் :
- சுரேஷ் ரெய்னா - 29 பந்துகள் (2011)
- ரிஷப் பந்த் - 29 பந்துகள் (2018)
- இர்பான் பதான்- 29 பந்துகள் (2005)
- முனாப் படேல் - 28 பந்துகள் (2006)
- சஞ்சய் மஞ்சுரேக்கர் - 25 பந்துகள் (1992)
ரிஷப் பந்த் கடந்த போட்டியில்,டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது ரன்னை சிக்ஸராக அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, September 1, 2018, 16:40 [IST]
Other articles published on Sep 1, 2018


Click it and Unblock the Notifications