Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்ட் செய்த காரியம்.. மொத்தமாக ஆடிப்போன ஆஸி. பவுலர்கள்.. இதுதான் இதுதான் இப்போது தேவை.. ஆனால்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று போட்டி முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், இன்று இந்திய அணியை தனது வலுவான பவுலிங் மூலம் ஆஸ்திரேலியா கட்டுப்படுத்தியது.

இன்று காலையில் இருந்து இதுவரை நடந்துள்ள ஆட்டத்தில் இந்தியா அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிரடியாக ஆடி வந்த பண்ட் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

 எப்படி

எப்படி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் இருந்து பண்ட் அதிரடியாக ஆடினார். ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் பேட் கும்மின்ஸ், ஸ்டார்க் ஹஸல்வுட் தொடங்கி எல்லோரும் அட்டாக்கிங் பவுலிங்கை செய்து வந்தனர். எல்லா பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பவுலிங் செய்தனர்.

விக்கெட்

விக்கெட்

ஒவ்வொரு பந்தையும் துல்லியமான வேகம் மற்றும் லென்தில் வீசினார்கள். விக்கெட் எடுப்பதை மட்டுமே ஆஸ்திரேலிய பவுலர்கள் குறியாக வைத்து இருந்தனர். ஆனால் இன்று பண்ட் களமிறங்கிய பின் மொத்தமாக ஆட்டமே மாறியது. பண்ட் களமிறங்கிய பின் டெஸ்ட் போட்டி போல ஆடாமல் ஒருநாள் போட்டி போல ஆடினார்.

அதிரடி

அதிரடி

தொடக்கத்தில் இருந்து பண்ட் அதிரடியாக ஆடினார். பவுண்டரி, இரண்டு ரன்கள் என்று அடுத்தடுத்து அதிரடி காட்டினார். முக்கியமாக கும்மின்ஸ் பவுலிங்கை குறி வைத்து பண்ட் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் தங்கள் திட்டத்தை மாற்றினார்கள். எல்லா பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு கொஞ்சம் ரன் செல்வதை கட்டுப்படுத்த முயன்றனர்.

விக்கெட்

விக்கெட்

விக்கெட் கூட எடுக்க வேண்டாம், ரன் செல்லாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் வந்தனர். தொடக்கத்தில் இருந்து பண்ட் அதிரடி காட்டியதே இதற்கு காரணமாக இருந்தது. இன்று பண்ட் டெஸ்ட் இன்னிங்ஸ் போல ஆட கூடாது, அதிரடி காட்ட வேண்டும் என்றுதான் களமிறங்கினார்.

அவுட்

அவுட்

29 ரன்கள் வரை பண்ட் சிறப்பாகவே ஆடினார். ஆனால் ஸ்டார்க் வீசிய ஷார்ட் பந்தை பவுண்டரி அடிக்க முயன்று , பந்து தவறுதலாக டிப் ஆனது. இதில் கீப்பரிடம் பண்ட் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் களத்தில் இருந்த வரை ஆஸ்திரேலிய பவுலர்கள் ரிதமை காலி செய்து.. கொஞ்சம் அவர்களை பண்ட் திணறடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும் .

Story first published: Sunday, December 27, 2020, 9:55 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+