For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் தோனிக்கு போட்டியா? நானே அவரு கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டு இருக்கேன்

Recommended Video

நான் தோனியிடம் இருந்து கற்று கொள்கிறேன்: ரிஷப் பண்ட்- வீடியோ

மும்பை : ரிஷப் பண்ட் இந்தியாவின் அடுத்த நிரந்தர விக்கெட் கீப்பர் என்ற இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி வருகிறார்.

தோனிக்கு போட்டியாளராகவோ அல்லது தோனியின் இடத்தை நிரப்பப் போகும் வீரர் என்றோ சித்தரிக்கப்படும் ரிஷப் பண்ட் தான் எதை நோக்கி செல்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பாக தோனியோடு முடிச்சு போட்டு அவரை பற்றி வரும் செய்திகளுக்கு பதில் அளித்துள்ளார் பண்ட்.

அவங்க வம்பிழுக்காம இருக்குற வரை நல்லது.. ஆஸ்திரேலிய அணியை போகிற போக்கில் எச்சரித்த கோலி அவங்க வம்பிழுக்காம இருக்குற வரை நல்லது.. ஆஸ்திரேலிய அணியை போகிற போக்கில் எச்சரித்த கோலி

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

ரிஷப் பண்ட் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பாதியில் இந்திய அணியில் இடம் பிடித்தார். அதில் தொடங்கிய ரிஷப் பண்ட், அதிரடியாக ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் இடம் பிடித்துவிட்டார். டெஸ்ட் அணியில் கிட்டத்தட்ட தன் இடத்தை நிரந்தரமாக்கி கொண்டுள்ளார் பண்ட்.

தோனியிடம் கற்றுக் கொள்கிறேன்

தோனியிடம் கற்றுக் கொள்கிறேன்

தான் தோனிக்கு போட்டி எல்லாம் இல்லை. அவரிடம் இருந்து பல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு இருக்கிறேன் என கூறினார் பண்ட். பண்ட் கூறும் போது, "நான் இங்கே யாருடனும் போட்டி போட வரவில்லை. என்னை பொறுத்தவரை இப்போது கற்றுக் கொள்ளும் நேரம். நான் தோனியிடம் சென்று நிறைய கற்றுக் கொள்கிறேன்" என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் முக்கியம்

டெஸ்ட் கிரிக்கெட் முக்கியம்

ரிஷப் பண்ட்டை டி20 வீரர், அதிரடி வீரர் என்றே முத்திரை குத்தி இருந்த நிலையில், தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சி அளித்தது என கூறினார் பண்ட். டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் முக்கியம் எனவும் கருத்து தெரிவித்தார் பண்ட்.

முத்திரை பதித்த பண்ட்

முத்திரை பதித்த பண்ட்

ரிஷப் பண்ட் 2016 அண்டர் - 19 உலகக்கோப்பை, இரண்டு ஐபிஎல் சீசன்கள் மற்றும் 2016-17 முதல் தர கிரிக்கெட் தொடர் என அனைத்திலும் தன் முத்திரையை பதித்தவர். இவர் தனது முதல் டெஸ்ட் ரன்னை சிக்ஸ் அடித்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 17, 2018, 15:22 [IST]
Other articles published on Nov 17, 2018
English summary
Rishab Pant says he is not competing with Dhoni but learn from him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X