Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்!

சென்னை : மேற்கிந்திய தீவகளுக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த், 71 ரன்களை குவித்துள்ளார்.

கடந்த சில போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரிஷப் பந்த், அதையொட்டி ரசிகர்களின் கேலிகள் மற்றும் கிண்டல்களுக்கு ஆளானார். தோனியின் மாற்றாக பார்க்கப்படும் ரிஷப்பை தோனி முழக்கத்தால் ரசிகர்கள் கலாய்த்தனர்.

இந்நிலையில் சென்னையில் நடந்து முடிந்துள்ள முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ரிஷப் பந்த் 71 ரன்களை அடித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்த சென்னை மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 முதல் ஒருநாள் சர்வதேச போட்டி

முதல் ஒருநாள் சர்வதேச போட்டி

சென்னையில் நேற்று நடந்து முடிந்துள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்துள்ள போதிலும், ரிஷப் பந்த் அதிகபட்சமாக 71 ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கைகொடுத்த ரிஷப் பந்த்

கைகொடுத்த ரிஷப் பந்த்

நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்தினார்.

 ரிஷப் பந்த் முழக்கமிட்ட ரசிகர்கள்

ரிஷப் பந்த் முழக்கமிட்ட ரசிகர்கள்

பந்த் தனது முயற்சியில் ரன்களை குவித்தாலும், அணியின் வெற்றிக்கு அது உதவி செய்யவில்லை. ஆயினும் அவரது ஆட்டத்தின்போது ரிஷப் பந்த்தின் பெயரை முழக்கமிட்டு சென்னை ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.

 வரலாற்றை மாற்றிய சென்னை

வரலாற்றை மாற்றிய சென்னை

தொடர்ந்து பல போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பந்த் தவறிய நிலையில், தோனியின் பெயரை உச்சரித்து, அவரை பல்வேறு மாநிலங்களின் ரசிகர்கள் வெறுப்பேற்றி வந்தனர். இந்நிலையில், நேற்றைய பந்த்தின் அதிரடி ஆட்டத்தை சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

"தினந்தோறும் முன்னேற்றி கொள்கிறேன்"

இந்நிலையில் தன்னை உற்சாகப்படுத்திய சென்னை ரசிகர்களுக்கு ரிஷப் பந்த் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய திறமைகளை தினந்தோறும் முன்னேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதுவே பிரதானம் - ரிஷப்

இதுவே பிரதானம் - ரிஷப்

அணியின் வெற்றிக்கு தன்னால் முடிந்த முயற்சியை எடுப்பது மற்றும் நல்ல ரன்களை குவிப்பது இவை இரண்டையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருவதாக ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, December 16, 2019, 18:25 [IST]
Other articles published on Dec 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+