For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி பேட்டிங்ல என்ன செய்வாருன்னு தெரியும்.. சீக்கிரம் ரிஷப் பண்ட்டை கொண்டு வாங்க

Recommended Video

தோனிக்கு பதிலாக சீக்கிரம் ரிஷப் பண்ட்டை கொண்டு வாங்க : அகர்கர்- வீடியோ

மும்பை : ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தோனிக்கு பதில் ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார் முன்னாள் வீரர் அஜித் அகர்கர்.

தோனி சமீப காலங்களில் ஒருநாள் போட்டி பேட்டிங்கில் பெரியளவில் ரன் குவிக்கவில்லை. எனினும், கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

ரிஷப் பண்ட் இல்லையா?

ரிஷப் பண்ட் இல்லையா?

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர், ஒருநாள் போட்டிகளில் தோனி தன்னை நிரூபிக்காததால், ரிஷப் பண்ட்டை அணியில் களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார். ரிஷப் பண்ட் இன்னும் ஒருநாள் அணியில் இடம் பிடிக்காமல் இருப்பதை தன்னால் நம்பமுடியவில்லை என கூறியுள்ளார் அகர்கர்.

தோனிக்கு ஓய்வு கொடுங்க

தோனிக்கு ஓய்வு கொடுங்க

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகள் இருப்பதால், எப்படியும் அதில் சில போட்டிகளில் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறுவார் எனவும் கூறியுள்ளார். "தோனி போட்டியில் என்ன செய்வார்" என்பது அனைவருக்கும் தெரியும், எனவே, அவருக்கு சில போட்டிகளில் ஓய்வளிக்கலாம் எனவும் கூறினார்.

தோனியின் திறன் அதிகம்

தோனியின் திறன் அதிகம்

அஜித் அகர்கரின் இந்த கருத்துக்கள் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால், அகர்கர் பேட்டிங் பற்றி மட்டுமே இங்கே பேசுவதாக தெரிகிறது. விக்கெட் கீப்பிங் திறனில் தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் ஒருவர் கூட அருகில் வர முடியாது. அதே போல, அவரது அனுபவம் கேப்டன் எடுக்கும் பல முடிவுகளிலும், பல பந்துவீச்சாளர்கள் எடுக்கும் விக்கெட்களிலும் இருக்கிறது என்பதையும் அவர் மறந்துவிட்டதகாவே தெரிகிறது.

யோசித்து பேசவும்

யோசித்து பேசவும்

பிசிசிஐ தோனியை உலகக்கோப்பை 2019 வரை அணியில் வைத்திருக்க முடிவு செய்திருப்பதாகவே தகவல்கள் கூறுகின்றன. எனவே, ரிஷப் பண்ட் அணியில் மாற்று வீரராக இணையலாம். மேலும், பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடுகிறார். அவரை அதிரடி பேட்ஸ்மேன் என்ற கோணத்தில் அணியில் சேர்த்து மிடில் ஆர்டரை வலுப்படுத்தலாம். ரிஷப் பண்ட் இப்போதைக்கு உலகத்தரமான விக்கெட் கீப்பர் இல்லை என பல முன்னாள் வீரர்கள் கூறி விட்டனர். எனவே, "தோனியை நீக்க வேண்டும், ரிஷப் பண்ட்டை ஒருநாள் போட்டி அணியில் சேர்க்க வேண்டும்" என சொல்பவர்கள் யோசித்து பேசுவது நல்லது.

Story first published: Monday, October 8, 2018, 15:28 [IST]
Other articles published on Oct 8, 2018
English summary
Rishab Pant should replace Dhoni in ODI format says Ajit Agarkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X