சிஎஸ்கேவின் ராயுடுவை முந்தினார் டெல்லியின் ரிஷப் பந்த்.... ஆரஞ்ச் கேப் பெற்றார்!
Recommended Video

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 375 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்ச் கேப் பெற்றார் டெல்லியின் ரிஷப் பந்த்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று நடந்த 32வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் டெல்லி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 29 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 9 போட்டிகளில் 375 ரன்கள் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு 8 ஆட்டங்களில் 370 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 349 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஹைதராபாத்தின் கேன் வில்லியம்சன் 322 ரன்களுடன் 4வது இடத்திலும், டெல்லி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 307 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி 286 ரன்களுடன் 6வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications