Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 மாதம் எழுந்திருக்க முடியாது.. ரசிகர்கள் ஷாக்.. ரிஷப் பண்ட்க்கு பதிலாக இனி யாருக்கு வாய்ப்பு?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இன்று கோர விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது அதிசயமாக கருதப்படுகிறது. தற்போது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் ரிஷப் பண்ட் பூரணம் குணமடைய சில மாதங்கள் ஆகலாம். இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக இருக்கும் ரிஷப் பண்ட் தற்போது கிரிக்கெட்டில் ஆறு மாதம் வரை விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ரிஷப் பந்தின் இடத்திற்கு யார் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.

கேஎஸ் பரத்

கேஎஸ் பரத்

டெஸ்ட் அணியில் பொறுத்தவரை ரிஷப் பண்டிற்கு பதிலாக கே எஸ் பரத் விளையாட வாய்ப்பு இருக்கிறது. கேஎஸ் பரத் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய வீரர். எனினும் அவருடைய பேட்டிங் அளவிற்கு சிறப்பானதாக இருக்காது. ஆனால் அவரை நம்பி பிளேயிங் லெவனில் விளையாட வைக்கலாம்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் டெஸ்டிலும் வாய்ப்பு வழங்கப்படலாம். ரஞ்சிப் போட்டியில் இசான் கிஷன் சதம் விளாசி நல்ல பார்மில் இருக்கிறார்.கேரளாவுக்கு எதிராக அவர் 132 ரன்கள் அடித்தார். இதனால் ரிஷப் பண்டிற்கு சரியான மாற்றுவீராக இஷான் கிஷன் செயல்படலாம்.இதேபோன்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஜார்கண்டுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 72 இரண்டாவது லிங்கில் 15 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 69 ரன்கள் எடுத்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

கே எல் ராகுல்

கே எல் ராகுல்

இதேபோன்று நட்சத்திர வீரர் கே எல் ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அவரை டெஸ்ட் போட்டியில் பயன்படுத்த நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கே.எல் ராகுலை நடு வரிசையில் விக்கெட் கீப்பராக பயன்படுத்திவிட்டு தொடக்க வீரராக சுப்மான் கில்லை விளையாட வைக்கலாம். ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு பெறும் குறை தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டை இந்திய அணி நிச்சயமாக மிஸ் செய்யும்.

Story first published: Friday, December 30, 2022, 11:08 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+