
தடுமாற்றம்
இதனையடுத்து தேவையில்லாத ஷாட் ஆடி சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்கிளிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிரடி ஆட்டம்
இந்த நிலையில் ரிஷப் பண்ட்க்கு புரோமோஷன் வழங்கப்பட்டது. நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பண்ட், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். டி20, ஒருநாள் போட்டியில் வேண்டுமானாலும் அவர் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் டாப் வீரர் என்பதை நிரூபித்தார்.

இந்தியா பதிலடி
எந்த பந்துவீச்சாளர்களை பார்த்து , இந்தியா கொஞ்சம் தடுமாறியதோ, அவர்களுக்கு எதிராகவே, சிக்சர், பவுண்டரி என ரிஷப் பண்ட் விளாசினார். இதனால் சரிவிலிருந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் மீண்டது இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது.

2 மைல்கற்கள்
இதனைத் தொடர்ந்தும் ரிஷப் பண்ட் அதிரடியை காட்டினார். 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரக்கெட்டில் 54 இன்னிங்சில் 50 சிக்சர்களை விளாசிய 2வது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.


Click it and Unblock the Notifications











