For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கை, கால் கொஞ்சம் கூட அசையல.. ஹெலிகாப்டர் மூலம் மும்பை கொண்டு செல்லபட்ட ரிஷப் பண்ட்.. வீடியோ

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி கோர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

கார் மோதிய தருணத்தில் ரிஷப் பண்டின் கார் நொறுங்கி தீயில் பற்றி எரிந்தது. இதனை அடுத்து அந்த வழியாக சென்ற பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ரிஷப் பண்டை காரில் இருந்து பத்திரமாக மீட்டு உயிரை காப்பாற்றினார்.

இதனால் ரிஷப் பண்ட் பிழைத்ததே அதிசயம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் டெல்லி புறநகர் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவ ஹெலிகாப்டர்

மருத்துவ ஹெலிகாப்டர்

இதில் ரிஷப் பண்டின் மூளையில் ஏதேனும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த உள் காயமும் இல்லை என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் ரிஷப் பண்டிற்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் அவசரமாக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் அவர் டெல்லியில் இருந்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

அப்போது ரிஷப் பண்டின் உடலை மருத்துவ குழு எடுத்து சென்றனர். அப்போது பண்டின் உடலில் எவ்வித அசைவும் இல்லாததால் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்த ரசிகர்கள் ரிஷப் பண்டிற்கு உண்மையில் என்னதான் நடந்தது? ஏன் அவர் அவசரமாக மும்பை அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது குறித்து கேட்டு வருகின்றனர் .

மேல் சிகிச்சை

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரிஷப் பண்டின் முழு மருத்துவ செலவையும் பி சி சி ஐ ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. ரிஷப் பண்டிற்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் மும்பையில் உள்ள பிரபல கோகிலாபேன் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அங்கு விளையாட்டு தொடர்பான மருத்துவம் மற்றும் ஆர்தோஸ்கோப்பி நிபுணர் டாக்டர் தின்ஷா படிவாலா தலைமையிலான மருத்துவ குழு ரிஷப் பண்ட்க்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

இதில் ரிஷப் பண்டிற்கு முதலில் காலில் ஏற்பட்டுள்ள தசை சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளது. இதன் பிறகு பி சி சி ஐ யின் மருத்துவ குழு ரிஷப் பந்தின் உடல்நிலை கண்காணித்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த காலகட்டத்தில் ரிஷப் பண்டின் தேவையான அனைத்து செலவையும் பிசிசிஐயே மேற்கொள்ளும் என ஜெயிஷா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 4, 2023, 16:34 [IST]
Other articles published on Jan 4, 2023
English summary
Rishabh pant airlifted to mumbai for higher treatment கை, கால் கொஞ்சம் கூட அசையல.. ஹெலிகாப்டர் மூலம் மும்பை கொண்டு செல்லபட்ட ரிஷப் பண்ட்.. என்ன ஆச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+