ரோகித் சர்மா வைத்த மெகா ட்விஸ்ட்.. ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம்.. இளம் வேகப்பந்துவீச்சாளர் அறிமுகம்
டாக்கா : இந்திய வங்கதேச அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. மூன்று ஒரு நாள் போட்டி கொண்டிருந்த தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் திரும்பி உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது. டாஸ் இழந்தது குறித்து பேசிய ரோஹித் சர்மா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று தெரியவில்லை.
ஆடுகளத்தில் ஈரப்பதம் கொஞ்சம் இருக்கிறது. நானும் டாஸ் வென்று இருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன். எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.

அறிமுக வீரர்
அதனால் இன்று நாங்கள் நான்கு ஆல்ரவுண்டர்களை வைத்து விளையாடுகிறோம். வாஷிங்டன் சுந்தர், ஷாபாஷ் அகமத், தீபக் சாஹர் போன்ற ஆல் ரவுண்டர்கள் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகின்றனர். அதேபோன்று குல்தீப் சென் என்ற இளம் வேகப்பந்துவீச்சாளர் இன்றைய ஆட்டத்தில் அறிமுகமாகிறார். ஷிகர் தவானும் நானும் தொடக்க வீரராக களமிறங்க இருக்கிறோம்.

பண்ட் நீக்கம்
விராட் கோலி மூன்றாவது வீரராக களம் இறங்குவார். ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யும் பணியை பார்த்துக் கொள்வார். நியூசிலாந்தில் மழை காரணமாக பெரிய அளவில் போட்டி நடைபெறவில்லை.எனினும் எங்கள் அணியில் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

வெற்றி பெறுவோம்
உலகக் கோப்பைக்கு இன்னும் சில காலம் இருக்கிறது.அதைப்பற்றி நாங்கள் இப்போது யோசிக்கவில்லை. எங்களுடைய குறிக்கோளெல்லாம் ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாடி வெல்ல வேண்டும். முதலில் தற்போது பேட்டிங் செய்வதால் ரன்களைக் குவித்து வங்கதேச அணிக்கு நெருக்கடி ஏற்படுத்த விரும்புகிறோம் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

பந்துவீச்சுக்கு சாதகம்
இதை தொடர்ந்து பேசிய லிட்டன் தாஸ் முதல் 10 ஓவரில் ஆடுகளம் பந்துவீச்சு சாதகமாக இருக்கும். எனவே நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். நாங்கள் மூன்று வேகப்பந்துவீச்சாளர் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட உள்ளோம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம் என்று லிட்டன் தாஸ் கூறினார்.

பிளேயிங் லெவன்
1, ஷிகர் தவான், 2, ரோகித் சர்மா, 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, கேஎல் ராகுல், 6, ஷபாஸ் அகமது, 7, வாசிங்டன் சுந்தர், 8, தீபக் சாஹர், 9, ஷர்துல் தாக்கூர், 10, குல்தீப் சென், 11இ முகமது சிராஜ்.


Click it and Unblock the Notifications