Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி விக்கெட் கீப்பர் அல்ல.. லெக் ஸ்பின்னர் ரிஷப் பண்ட்-னு சொல்லுங்க.. டி20 லீக்கில் நடந்த சம்பவம்!

டெல்லி: டிஎன்பிஎல் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வின் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து பார்ப்பார். அண்மையில் முடிவடைந்த டிஎன்பிஎல் சீசனில் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கிய அஸ்வின், ஹாட்ரிக் அரைசதம் அடித்து திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார்.

இதனை ஒரு சோதனை களமாக பயன்படுத்தி அஸ்வின் தனது திறமைகளை வளர்த்து வருகிறார். அந்த வகையில் டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் சார்பிலும் தற்போது டெல்லி பிரீமியர் லீக் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புரணி டில்லி 6 அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ipl 2025 rishabh pant Delhi

முதல் போட்டியில் டில்லி 6 அணியை எதிர்த்து தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது. இந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் ஆயுஷ் பதோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டில்லி 6 அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அர்பித் ராணா 41 பந்துகளில் 59 ரன்களும், வன்ஷ் பேடி 19 பந்துகளில் 47 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. தெற்கு டெல்லி அணி தரப்பில் சிறப்பாக ஆடிய கேப்டன் பதோனி 29 பந்துகளில் 57 ரன்களும், பிரியன்ஷ் ஆர்யா 30 பந்துகளில் 57 ரன்களும் சேர்த்தனர். இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியது.

இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியுள்ள ரிஷப் பண்ட் ஒருமுறை கூட பவுலிங் செய்ததில்லை. ஐபிஎல் தொடரில் கூட ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மட்டுமே செய்துள்ளார். இந்த நிலையில் தெற்கு டெல்லி அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவையாக இருந்த போது, ரிஷப் பண்ட் பந்தை கையில் எடுத்தார்.


அவர் வீசிய முதல் பந்திலேயே ஒரு ரன் சேர்த்து தெற்கு டெல்லி அணி வென்றது. ரிஷப் பண்ட் பவுலிங் செய்ய வந்ததே ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லெக் ஸ்பின்னராக ரிஷப் பண்ட் செயல்பட்டது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் ஏற்கனவே ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் பவுலர்களாக மாறி கடைசி 2 ஓவர்களை வீசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். இதன் தாக்கமே ரிஷப் பண்ட் பவுலிங் செய்ய தொடங்கியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Story first published: Sunday, August 18, 2024, 13:19 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+