Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்.. ரிஷப் பண்ட் படைத்த மெகா சாதனை.. அடுத்த நிமிடமே நடந்த சோகம்!

மான்செஸ்டர்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் காலில் காயம் ஏற்பட்டு, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், சுப்மன் கில் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன்பின் சாய் சுதர்சன் - ரிஷப் பண்ட் கூட்டணி இணைந்தது.

Rishabh Pant Becomes First Wicketkeeper to Score 1000 Runs in England Injured Moments Later

ரிஷப் பண்ட் அதிரடியாக ரன்களை குவிக்க, சாய் சுதர்சன் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதிலும் பிரைடன் கார்ஸ் வீசிய ஒரு பந்தில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸ் பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. இந்த போட்டியில் 19 ரன்களை கடந்த போது, ரிஷப் பண்ட் புதிய வரலாறு ஒன்றை படைத்தார். இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய வரலாறு ரிஷப் பண்ட் வசமாகி இருக்கிறது.

இங்கிலாந்து மண்ணில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக தோனி 778 ரன்களை சேர்த்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 37 ரன்களை எடுத்திருந்தார். அப்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், அதனை காலில் வாங்கினார்.

இதனால் ரிஷப் பண்ட் உடனடியாக பிசியோவை களத்திற்கு வரவழைத்தார். அப்போது ரிஷப் பண்ட் ஷூவை கழற்றி பார்த்த போது, அவரின் காலில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் சுண்டு விரலில் அருகில் மிகப்பெரிய வீக்கம் இருந்தது. இதனால் மினி ஆம்புலன்ஸில் அமர வைக்கப்பட்டு ரிஷப் பண்ட் ஓய்வறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரில் அபாரமான ஃபார்மில் இருந்து வரும் ரிஷப் பண்ட் இதுவரை 448 ரன்களை சேர்த்திருக்கிறார். கடந்த போட்டியின் போதே கை விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், இந்தப் போட்டியில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து களம் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 23, 2025, 22:50 [IST]
Other articles published on Jul 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+