தீவிர பயிற்சி
பொதுவாக, ஒரு வீரர் பயிற்சியில் எப்படி விளையாடுகிறார், பந்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை வைத்தே, அவருடைய ஃபார்ம் குறித்து முன்கூட்டியே தீர்மானித்து விடலாம். பிளேயிங் லெவினில் இடம் கிடைப்பதிலும், ஒருவர் பயிற்சியில் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்து முடிவு எடுக்கப்படும்.

ஹெலிகாப்டர் ஷாட்
இந்த நிலையில்,இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோவில் ரிஷப் பண்ட் எரிமலை போல் வெடித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பந்துதுவீச்சாளர்கள் வீசிய ஒவ்வொரு பந்தும், சிக்சருக்கு பறக்க விட்டார் ரிஷப் பண்ட். இதில், தோனியை போல் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து பந்தை லேக் சைடுக்கு பறக்கவிட்டார் ரிஷப் பண்ட்.

காரணம் என்ன?
ரிஷப் பண்ட் வழக்கத்திற்கு மாறாக இன்று ரண கொடூரமாக பந்தை கொலை செய்ததற்கு காரணம் ஒன்று இருக்கிறது. அண்மையில் நடிகை ஊர்வசி ரத்துலா, ரிஷப் பண்ட் தம்மை பார்ப்பதற்காக 10 மணி நேரம் அமர்ந்திருந்தார் என்றும், இதற்கு ரிஷப் பதிலடி தர, சின்ன தம்பி, கிரிக்கெட் மட்டும் விளையாடு என்று ஊர்வசி ரத்துலா கடுமையாக விமர்சனத்தை வைத்தார். இது ரிஷப் பண்ட்க்கு மண்டை சூட்டை கொடுத்துவிட்டது.

பேட்டிங்கில் எந்த இடம்?
இதனால் ஆசிய கோப்பை போட்டியில் தனி ஆளாக நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து ஊர்வசி ரத்துலாவுக்கு பதிலடி தர வேண்டும் என்று ரிஷப் பண்ட் முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் எந்த இடத்தில் இறங்குவார் என்ற சந்தேகம் எழுந்தள்ளது. ஆனால், அவருக்கு பேட்டிங் வரிசையில் 4 அல்லது 5வது இடேமே தரப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications