பழைய காதலியை வாட்ஸ் ஆப்பில் பிளாக் செய்த ரிஷப் பண்ட்- புதிய தோழியுடன் சேர முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இந்திய அணியின் எதிர்கால கேப்டன் என்று கூட இவரை கருதலாம்
சமீபத்தில் கூட தோனியின் அதிகவேக 100 டிஸ்மிசல் சாதனையை தகர்த்தார் ரிஷப் பண்ட்.
தற்போதைய சூழலில், உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை ரிஷப் பண்ட் தான் பெற்றுள்ளார்.

பாலிவுட்-கிரிக்கெட் ஜோடி
பாலிவுட்டையும், கிரிக்கெட்டையும் என்றும் பிரிக்கவே முடியாது. பாலிவுட் ஹீரோயின்களுடன், கிரிக்கெட் வீரர்கள் டேடிங் செய்வது பட்டோடி காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த காதல் ரிஷப் பண்ட், அதிரடி வீரர் மட்டுமல்ல, களத்தில் துள்ளி குதிக்கும் அழகான இளம் காளை. ஹேர் கலர், ஸ்டைலான உடை, கழுத்தில் செயின் என ஃபேஷன் ஐக்கானாக இருக்கும் ரிஷப் பண்டை யாருக்கு தான் பிடிக்காது.

ரிஷப் பண்ட் டேட்டிங்
இதனால் ரிஷப் பண்ட் மீது பாலிவுட் நட்சத்திரங்கள் குறிவைத்து அவர் பின்னால் சுற்ற தொடங்கினர். சில ஆண்டுகளுக்கு முன் ரிஷப் பண்டும், பாலிவுட் நட்சத்திரமான ஊர்வசி ரத்துலாவும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்றனர். பல நட்சத்திர விடுதிகளுக்கு டேடிங் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் பரவின.

புதிய தோழி
இந்த நிலையில், ரிஷப் பண்டும், ஊர்வசி ரத்துலாவும் பிரிந்தவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரிஷப் பண்டும் இஷா நெகி என்ற பெண்ணை காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் மணமுடைந்த ஊர்வசி ரத்துலா, திரைப்படங்களில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார்
Recommended Video

வாட்ஸ்ஆப்பில் பிளாக்
தற்போது மீண்டும் ரிஷப் பண்டுடன் தொடர்பு வைத்து கொள்ள ஊர்வசி ரத்துலா முயன்றுள்ளார். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் , அவரை வாட்ஸ் ஆப்பில் பிளாக் செய்துள்ளார். இதனையடுத்து இனி ரிஷப் பண்டிடம் பேசப்போவது இல்லை என்று முடிவு எடுத்துள்ள ஊர்வசி ரத்துலா, தமிழில் வெளியான திருட்டு பையலே 2 படத்தீன் ஹிந்தி ரிமேக்கிலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications