For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்டின் மெகா சொதப்பல்கள்.. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்.. விடியல் வருமா?

கட்டாக்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் கேப்டன் ரிஷப் பண்டின் செயல்பாடு விமர்சனத்தை பெற்றுள்ளது.

Recommended Video

IND vs SA Rishabh pant சொன்ன தோல்விக்கான காரணம் | *Cricket

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் அடித்தும் தோல்வியை தழுவியது. நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர்.

ஆனால், கடைசி சில ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி வெற்றி கணியை தட்டி சென்றது.

பேட்டிங் வரிசை சொதப்பல்

பேட்டிங் வரிசை சொதப்பல்

இந்த நிலையில், ரிஷப் பண்ட் கேப்டன்ஷியில் செய்த மெகா தவறுகளை தற்போது காணலாம். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் 10-15 ரன்கள் குறைவாக அடித்ததன் தான் காரணம் என்று கூறினார். ஆனால், தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய காத்திருக்க, அவருக்கு பதிலாக அக்சர் பட்டேலை முன்பே இறக்கிவிட்டார் ரிஷப் பண்ட்.இதன் மூலம் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய தாமதமானது.

பயன்படுத்தவில்லை

பயன்படுத்தவில்லை

இருப்பினும் கார்த்திக் 2 சிக்சர்கள் விளாசி, அணியை கௌரவமான இலக்கிற்கு அழைத்து சென்றார். இதே போன்று பந்துவீச்சாளர்களை சுழற்சி முறை மாற்றுவதில் ரிஷப் பண்ட் தவறு செய்தார். 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா கைப்பற்றிய நிலையில், ரிஷப் பண்ட் மீண்டும் நெருக்கடி அளித்திருக்க வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்கா இன்னிங்சை கட்டமைக்க வழி அமைத்து கொடுத்தார்.

ஹர்சலுக்கு 3 ஓவர் ?

ஹர்சலுக்கு 3 ஓவர் ?

இதே போன்று நட்சத்திர பந்துவீச்சாளர்களின் முழு ஓவரையும் ரிஷப் பண்ட் பயன்படுத்துவதில்லை, நேற்று ஹர்சல் பட்டேலுக்கும் 3 ஓவர் தான் வழங்கி இருக்கிறார், ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும் 3 ஓவர்கள் தான் வழங்கி இருக்கிறார். எப்போதும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே கேப்டன்கள், இப்படி தான் ஓவர்களை வழங்க வேண்டும் என்று திட்டம் போட்டு களத்திற்கு வருவார்கள்.

மெகா தவறு

மெகா தவறு

ஆனால், களத்தில் சூழல் மாறும் போது, தங்களது திட்டத்தையும் மாற்றி, சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைப்பார்கள். ஆனால் பண்ட் போட்ட திட்டத்தின் படியே, பவுலர்களுக்கு ஓவர்களை வழங்கினார்.இதனால் சூழலுக்கு ஏற்ப செயல்படவில்லை. நேற்று பண்ட் பேட்டிங்கிலும் சொதப்பியதால், கேப்டன் பதவிக்கு ராகுலை போல் தகுதியான ஆள் இல்லை என்று ரிஷப் பண்ட் உணர்த்துகிறார்.

Story first published: Monday, June 13, 2022, 15:24 [IST]
Other articles published on Jun 13, 2022
English summary
Rishabh Pant blunder Mistake in captaincy vs SA 2nd t20 ரிஷப் பண்டின் மெகா சொதப்பல்கள்.. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்.. விடியல் வருமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+