For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. இதுவரை 4 பேருக்கு மட்டுமே கிடைத்த பெருமை.. முழு விவரம்

டெல்லி: இந்திய அணி கேப்டனாக நேற்று தென்னாப்பிரிக்க தொடரில் பொறுப்பு எடுத்த ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி கடைசி 7 ஓவரில் 100 ரன்களுக்கு மேல் விளாசி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் பண்ட்

பேட்டிங்கில் பண்ட்

இது முதல் போட்டி என்பதால் ரிஷப் பண்ட் கேப்டன்ஷியில் பெரிய குறைகளை சொல்ல முடியவில்லை. அதே சமயம், பேட்டிங்கிலும் நேற்று 16 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் 29 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். கேப்டனாக பேட்டிங்கிலும் ரிஷப் பண்ட் பாஸ் மார்க் வாங்கினார்.

Recommended Video

IND vs SA இந்தியா படுதோல்வி ஏன் Rishabh Pant விளக்கம் | #Cricket
தோனி சாதனை முறியடிப்பு

தோனி சாதனை முறியடிப்பு

ஆனால், தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன்களை குவிக்க தொடங்கியதும் ரிஷப் பண்ட் கொஞ்சம் பதற தொடங்கிவிட்டார். இந்த நிலையில், இளம் வயதில் இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்று ரிஷப் பண்ட் , தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனி 26 வருடம் 68 நாட்களில் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

4வது வீரர் என்ற பெருமை

4வது வீரர் என்ற பெருமை

தற்போது ரிஷப் பண்ட் 24 வருடம் 248 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். டி20 அணிக்கு கேப்டனாக மாறிய இளம் வீரர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். ரெய்னா 23 வருடம் 197 நாட்களில் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதே போன்று விக்கெட் கீப்பராக இருந்து இந்திய அணிக்கு கேப்டனாக மாறிய 4வது வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார்.

எதிர்கால கேப்டன்

எதிர்கால கேப்டன்

இதற்கு முன்பு சையது கிர்மானி, ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் இந்த பெருமையை பெற்றனர். தென்னாப்பிரிக்க தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த முழு நேர கேப்டனாக செயல்படும் நபர்கும் வாய்ப்பு ரிஷப் பண்ட்க்கு கிடைத்துவிடும். எஞ்சிய 4 போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்தே அது முடிவாகும்.

Story first published: Friday, June 10, 2022, 16:05 [IST]
Other articles published on Jun 10, 2022
English summary
Rishabh pant breaks MS Dhoni record and joined in unique list தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. இதுவரை 4 பேருக்கு மட்டுமே கிடைத்த பெருமை.. முழு விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+