Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தட்டி தூக்கிய ரிஷப் பண்ட்.. நடப்பாணடின் சிறந்த கேட்ச்.. கோலியின் மானத்தை காப்பாற்றினார்

சட்டோகிராம் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் வங்கதேச அணி அபாரமாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

254 ரன்கள் என்ற இலக்குடன் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் அதிரடி காட்டியது. குறிப்பாக சுப்மான் கில், புஜாரா ஆகியோர் சதம் விளாசினர்.

 மாறிய ஆடுகளம்

மாறிய ஆடுகளம்

இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸ் முடிவில் 258 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தங்களது கடைசி இன்னிங்சை தொடர்ந்தது. ஆடுகளத்தின் தன்மை திடீரென்று பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.

 வங்கதேசம் பதிலடி

வங்கதேசம் பதிலடி

புஜாராவே 130 பந்துகளில் சதம் விளாசி இருந்தால், ஆடுகளத்தின் நிலையை பார்த்து கொள்ளுங்கள். இதனால் வங்கதேச வீரர்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுப்படவில்லை. இதனால் 2 நாள் எஞசிய நிலையில் வங்கதேசம் இலக்கை எட்டி விடுமோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

 முதல் விக்கெட்

முதல் விக்கெட்

தொடக்க வீரர்கள் நஜிமுல் மற்றும் ஜாகீர் ஆகியோர் பொறுப்பாக விளையாடி இந்திய பவுலர்களை வெறப்பேற்றினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 124 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில், 2வது இன்னிங்சின் 47வது ஓவரில் தான் அந்த சம்பவம் நடந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தை நஜிமுதல் அடிக்க, அது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலியிடம் பறந்து சென்றது.

 ரிஷப் பண்ட் அபாரம்

ரிஷப் பண்ட் அபாரம்

ஆனால் விராட் கோலி அந்த பந்தை பிடிக்காமல் தவறவிட, அது ரிஷப் பண்டிடம் சென்றது. எனினும் பண்டும் ஒரு கையில் தவறவிட பிறகு அதனை மறு கையில் கீழே விழுந்து பிடித்து கேட்ச் செய்தார். இதன் மூலம் வங்கதேச அணி முதல் விக்கெட்டை இழந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான சூழலை இந்த கேட்ச் வாய்ப்பை இந்தியா விட்டு இருந்தால் பெரும் பின்னடைவாக போய் இருக்கும். ஆனால் கோலியின் மானத்தை பண்ட் காப்பாற்றினார்.

Story first published: Saturday, December 17, 2022, 14:17 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+