For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை போல் மாஸ் காட்டிய பண்ட்.. ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய முடிவு..இந்தியா பதிலடி

எட்ஜ்பாஸ்டன் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கலக்கி வருகிறார்.

சர்வதேச டி20 போட்டியில் முதல்முறையாக தொடக்க வீரராக ரிஷப் பந்த் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.

கில்கிறிஸ்ட் போல் ஒரு நாள், டி20 போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது .அதற்கு ஏற்றார் போல் ரிஷபன்ட் இன்றைய ஆட்டத்தில் 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

முதல் பந்தில் அதிர்ச்சி

முதல் பந்தில் அதிர்ச்சி

ஜடேஜா தன் பங்கிற்கு 29 பந்துகளில் 46 ரன்கள் விளாச , இந்திய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலே புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் ஜேசன் ராய் ஸ்லீப்பில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார் .

ரிஷப் பண்டின் முயற்சி

ரிஷப் பண்டின் முயற்சி

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஒருநாள், டி 20 அணிகளின் புதிய கேப்டன் ஜாஸ் பட்லர் நான்கு ரண்களில் புவனேஸ்வர் குமாரிடம் ஆட்டம் இழந்தார் . ஜாஸ்பெட்லர் அதிரடியாக இறங்கி வந்து ஆட கூடியவர் என்பதால் ரிஷப் பண்ட் ஸ்டம்ப்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டார். புவனேஸ்வர் குமார் கொஞ்சம் வேகம் குறைவாக வீச அந்தப் பந்தை அடிக்கும் முயன்ற போது அது ரிஷப் பண்டிடம் பிடிபட்டது.

டிஆர்எஸ் முடிவு

டிஆர்எஸ் முடிவு

எனினும் இதற்கு நடுவர் அவுட் தரவில்லை. அப்போது ரிஷப் பன்ட் ரோகித் சர்மாவிடம் சென்று டி ஆர் எஸ் , ரிவ்யூ கேட்கும் படி அறிவுறுத்தினார். பந்தின் இந்த யோசனையை நம்பி ரோகித் சர்மாவும் டி.ஆர். எஸ் முடிவை கேட்டார். அப்போது ரிப்ளேவில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பட்லர் அவுட் என்று அறிவிக்கப்பட்டார் .இது ஆட்டத்தின் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .

இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து தடுமாற்றம்

171 ரன்கள் தான் இலக்கு என்பதால் ஜாஸ் பட்லர் தனியாகவே நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்திருக்க கூடும் . ஆனால் ரிஷப் பன்ட் தோனியை போல் சிறப்பாக செயல்பட்டு டி .ஆர்.எஸ் முடிவை கேட்க சொன்னார் . இதனை அடுத்து லிவிங் ஸ்டோன், ஹாரி புருக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 41 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Story first published: Saturday, July 9, 2022, 22:01 [IST]
Other articles published on Jul 9, 2022
English summary
Rishabh pant brilliant decision made a turning point in 2nd eng t20 தோனியை போல் மாஸ் காட்டிய பண்ட்.. ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய முடிவு..இந்தியா பதிலடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+