For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நானே பெரிய தோனி ரசிகன்டா.. அப்புறம்தான் இந்திய அணி பிளேயர்.. கேக் வெட்டி கொண்டாடிய ரிஷப் பந்த்!

டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி ரிஷப் பண்ட் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் கேப்டன் எம்எஸ் தோனி. அதேபோல் இளம் வீரர்கள் பலரையும் இந்திய அணிக்கு கொண்டு வந்து வாய்ப்பு கொடுத்து உருவாக்கியவர். விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் வரை உருவாக்கியுள்ளார்.

Rishabh Pant Celebrated MS Dhoni Birthday by cutting the cake video is Trending

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைந்து ஓய்வுபெற்று சாஹா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாக மறைமுக காரணமாகவும் அமைந்தவர். தோனிக்கு பின்பே, தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உருவாக தொடங்கினார்கள். அந்த வகையில் தோனிக்கு பின் அவரது இடத்தை சிறப்பாக செய்து வருபவர் ரிஷப் பண்ட்.

தோனியின் தீவிர ரசிகரான ரிஷப் பண்ட் ஒவ்வொரு முறையும் தோனி குறித்து பெருமிதமாக பேசி வந்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கி தோனிக்கு நேரடியாக சவால் அளித்துள்ளார். இருப்பினும் தோனிக்கான மரியாதை மட்டும் என்றும் குறைந்ததில்லை. இந்த நிலையில் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு மற்ற வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் ரிஷப் பண்ட் ஒருபடி மேல் சென்று, தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் நீண்ட நாட்களாக என்சிஏ-வில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உலகக்கோப்பைத் தொடருக்குள் ரிஷப் பண்ட் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

Story first published: Friday, July 7, 2023, 13:25 [IST]
Other articles published on Jul 7, 2023
English summary
Rishabh Pant is celebrating MS Dhoni's 42nd Birthday with a Cake Cutting Ceremony in his place. This Video is Trending in Social Media among the cricket fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+