For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் அபார சதம்.. ஹர்திக் ஆல்ரவுண்ட் சாதனை.. 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்ற இந்தியா

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது .டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பாரிஸ்டோ டக் அவுட் ஆகி வெளியேறினார். இதேபோன்று நட்சத்திர வீரர் ஜோ ரூட்டும் முகமது சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் .

தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

ஒரே ஓவரில் முஹம்மது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடியை அளித்தார்.இதனை அடுத்து தொடக்க வீரர் ராய் , ஸ்டோக்ஸ் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. பென்ஸ் ஸ்டோக்ஸ் 27 ரன்களிலும் , ராய் 41 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து களத்துக்கு கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

ஹர்திக் அபாரம்

ஹர்திக் அபாரம்

மோயின் அலி 44 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று லிவிங்ஸ்டனும் 27 ரன்கள் சேர்த்தார். ஒரே ஓவரில் பட்லர், லிவிங் ஸ்டோன் ஆகியோர் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தினார். இதில் ஜடேஜா பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இறுதியில் கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் சேர்க்க இங்கிலாந்த அணி 45 வது ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஹர்திக் பாண்டியா 7 ஓவர் மட்டுமே வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரோகித் சர்மா 17 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார் .இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும். ஆனால் அவர் டோப்லி பந்தில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று விராட் கோலி 22 பந்துகளில் 17 ரன்கள் அடித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது, ஆஃப் ஸ்டம்ப்க்கு வெளியே சென்ற பந்தை தட்டிவிட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

ஹர்திக் 71

ஹர்திக் 71

இதனால் இந்திய அணி 38 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.சூர்யகுமார் யாதவ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, 5வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட், ஹர்தக் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்த மீட்டனர். முதலில் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி, பிறகு தனது அதிரடியை காட்டினார். ஹர்திக் பாண்டியா 55 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரிஷப் பண்ட் சதம்

ரிஷப் பண்ட் சதம்

மறுமுனையில் வழக்கம் போல் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 113 பந்துகளை எதிர்கொண்ட அவர் 125 ரன்களை விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதில் டேவிட் வில்லி வீசிய 42வது ஓவரில் ரிஷப் பண்ட் தொடர்ந்து 5 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 42.1வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதனையடுத்து இங்கிலாந்து மண்ணில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.

Story first published: Sunday, July 17, 2022, 23:12 [IST]
Other articles published on Jul 17, 2022
English summary
Rishabh Pant century puts india won the series after 8 years in England ரிஷப் பண்ட் அபார சதம்.. ஹர்திக் ஆல்ரவுண்ட் சாதனை.. 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்ற இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+