Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்கால வீரர்! மேட்ச் வின்னர்! ரிஷப் பண்ட்டை ஆஹா.. ஓஹோ.. என புகழும் இரு ஜாம்பவான் கேப்டன்கள்

Recommended Video

ரிஷப் பண்ட்டை புகழும் இரு கேப்டன்கள் |

டெல்லி : ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர், ஆலோசகர் உள்ளிட்டோர் தங்கள் அணி வீரர்களை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, ரிஷப் பண்ட்டை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆலோசகர் கங்குலி கூறியுள்ளனர்.

விவாதம்

விவாதம்

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற விவாதங்கள் பெரிய அளவில் நடந்து வருகின்றன. அந்த வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்து விட்ட ரிஷப் பண்ட், ஒருநாள் அணியில் இன்னும் நிலையான இடத்தை பிடிக்கவில்லை.

மேட்ச் வின்னர்

மேட்ச் வின்னர்

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "ரிஷப் பண்ட் உலகக்கோப்பையில் இந்திய அணியின் மேட்ச் வின்னராக இருப்பார்" என தெரிவித்தார். இதுவரை, ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம்

எதிர்காலம்

கங்குலி கூறுகையில், "ரிஷப் பண்ட் தான் எதிர்காலம். அவர் கடும் உழைப்பாளி. அடுத்த சில வருடங்களில் நாட்டின் சொத்தாக இருப்பார். இந்திய அணியில் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய சரியான வீரர் இவர் தான்" என்றார்.

புகழ்ச்சி தேவையா?

புகழ்ச்சி தேவையா?

ரிஷப் பண்ட் அனுபவமற்ற வீரர். டெஸ்ட் போட்டிகளில் அடித்த இரண்டு சதங்கள் தவிர இதுவரை பெரிய சாதனைகள் செய்யவில்லை. அவர் நிச்சயம் திறமையானவர் தான். ஆனால், வளர்ந்து வருவதற்குள், அவரை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்து தள்ளுவது சரி தானா?

Story first published: Tuesday, March 19, 2019, 15:44 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+