Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்க்கு என்ன தான் ஆச்சு..!!டி20 போட்டியில் சொதப்பும் டெஸ்ட் கிங்.. எங்கே சிக்கல் இருக்கிறது?

ராஜ்காட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்த தொடரில் முதல் போட்டியில் 29 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், 2வது போட்டியில் 5 ரன்களும், 3வது போட்டியில் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்டத்தில் 40 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், ரிஷப் பண்ட்க்கு தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் சொதப்பல்

மீண்டும் சொதப்பல்

முதலில் மெதுவாக ரிஷப் பண்ட் ஆடினார். சரி, விக்கெட்டுகள் வீழ்ந்து இருப்பதால் முதலில் கொஞ்சம் அமைதியாக ஆடிவிட்டு பின்னர் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 23 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் அடித்த ரிஷப் பண்ட் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ரிஷப் பண்டை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

தவறு எங்கே?

தவறு எங்கே?

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் ரிஷப் பண்ட், அவருக்கே உரிய போட்டியில் ஏன் சொதப்புகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர் ரிச்சர்ட்ஸ், ரிஷப்க்கு லெக் ஸ்டம்ப் லைனிலோ , இல்லை ரைட் ஹேன்ட் சைட்ல வர மாதிரியோ பந்தை வீசுவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார்.

பேட்டிங்கில் குறை

பேட்டிங்கில் குறை

இதனால் ரிஷப் பண்டின் பலமான டீப் ஸ்கொயர் லெக், லாங் லெக், பைன் லெக் திசைகளில் ஷாட்ஸ் ஆட முடிவதில்லை. இதனால் ரிஷப் பண்டால் பவுண்டரிகள் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க முடியவில்லை. மேலும், அவர் ஷாட் ஆடும் போது உடல் எடை பின்னால் இருக்கு , இதனால ஆப்-ஸைட் வரும் பந்துகள ஆடறதும் கஷ்டமாகி விட்டது. இதனால் ஓயிட் பால் கிரிக்கெட்டுக்காக ஷாட்ஸ்களில் ரீ-வொர்க் பண்ணனும்.

பவர் ஹிட்டிங்

பவர் ஹிட்டிங்

ரிஷப்புக்கு நல்ல உடல் வலிமை உள்ளது. அவரால் சிறப்பாக பவர் ஹிட்டிங் அடிக்க முடியும். ஆகையால் பந்தை கடைசிவரை பார்த்து பலமா அடிக்கறது அவருக்குச் சரியாக வரும். அவர் உடல் எடையை முன்னாள் கொண்டு வந்து ஆடனும். ரிஷப் இந்த முறையில சிங்கிள் ரொடேட் செய்து, அவ்வப்போது டிரைவ் ஆடாமல் பவர்-ஹிட்டிங் மட்டும் ஆடினாலே ரன் வந்துடும் என்று கிரிக்கெட் விமர்சகர் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

ரிஷப் இடத்திற்கு ஆபத்து

ரிஷப் இடத்திற்கு ஆபத்து

ரிஷப் பண்ட் தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே அவருக்கு ரன் வந்து சேர்ந்துவிடும். ஒரு வேலை ரோகுல் போல் கேப்டன்ஷி அழுத்தம் ரிஷப் பண்டையும் பாதிப்பதாக கிரிக்கெட் ரசிகர்களும் கூறியுள்ளனர். தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் ரிஷப் பண்டின் இடத்துக்கும், அவருடைய கேப்டன் கனவுக்கும் ஆபத்து வரலாம்.

Story first published: Friday, June 17, 2022, 21:55 [IST]
Other articles published on Jun 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+