Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் இடத்தை மாற்றுவதால் சிக்கல்.. இந்தியாவின் தோல்விக்கு காரணம்..பேட்டிங் எந்த இடம் சரியானது?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரிஷப் பண்ட் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் டாப் வீரராக ரிஷப் பந்த் வலம் வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் எப்படி இருக்கிறாரோ, அதேபோல் இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப் பந்த் செயல்படுகிறார்.

அவ்வளவு ஏன் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பண்ட் மட்டுமே. ஆனால் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் செயல்படுவதைப் போல் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் செயல்படுவதில்லை.

ஒருநாள் கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டை டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதற்கு ஏற்றார் போல் அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட் டி20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக விளையாடினார். இருப்பினும் மூன்றாவது டி20 போட்டியில் அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். டி20 கிரிக்கெட்டில் அவருடைய நிலைமை இப்படி இருக்க ஒரு நாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டா இப்படி விளையாடிகிறார் என்பது போல் அவருடைய கரியர் மோசமாக உள்ளது.

தொடக்க வீரராக பண்ட்

தொடக்க வீரராக பண்ட்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கூட ரிஷப் பந்தை நான்காவது வீரராக ரோகித் சர்மா களம் இறக்கினார்.ரன்குவிக்க ஏதுவான சூழல் இருந்த நிலையிலும் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. ரிஷப் பண்ட்க்கு ஓயிட்பால் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் என்ற நிலை மட்டுமே சரியானதாக இருக்கும் என்று கவாஸ்கர் கூறினார். இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் அவர் எந்த இடத்தில் களமிறங்கி எவ்வளவு ரன்களை அடித்திருக்கிறார் என்பதை தற்போது காணலாம் .

 பண்ட் பேட்டிங் வரிசை

பண்ட் பேட்டிங் வரிசை

ரிஷப் பண்ட் தொடக்க வீரராக ஒரு போட்டியில் விளையாடிருக்கிறார். அதில் 18 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். நான்காவது வீரராக ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 342 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 26 தான். மொத்தமாக இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார் .ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் இதுவரை 7 முறை விளையாடியிருக்கிறார். இதில் 310 ரன்கள் அடித்துள்ள ரிஷப் பண்ட் சராசரி 44.28 என வைத்திருக்கிறார்.இதில் ஸ்ட்ரைக் ரேட்டும் 136 என்று அளவில் பிரமாதமாக உள்ளது. இதில் மூன்று அரைசதமும் அடங்கும்.

மாற்ற கூடாது

மாற்ற கூடாது

ஆறாவது இடத்தில் ரிஷப் பந்த் இதுவரை இரண்டு முறை விளையாடி இருக்கிறார். அதில் 45 ரன்கள் மட்டுமே அவர் அடித்திருக்கிறார். எனவே ரிஷப் பண்ட்க்கு ஐந்தாவது இடம் தான் பேட்டிங் வரிசையில் சரியானதாக இருக்கும். இதற்கு மேல் அவர் களமிறங்க வேண்டும் என்றால் தொடக்க வீரராக தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் . இல்லையெனில் ஐந்தாவது இடத்திலே அவர் நீடிக்க வேண்டும்.ரிஷப் பந்தை அடிக்கடி இதுபோல் மாற்றினால் அது அணியின் தோல்விக்கும் அவருடைய பின்னடைவுக்கும் பெரும் காரணமாக அமைந்துவிடும் .

Story first published: Friday, July 15, 2022, 16:15 [IST]
Other articles published on Jul 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+