Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாட்டிக்கிட்டியே பங்கு.. பண்ட் தலைமேல் வந்த கத்தி.. காயத்தின் போதும் டெஸ்ட் போட்டிக்காக அவசர வருகை!!

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் பல காய பாதிப்புகளுக்கு இடையிலும் ஒரு நற்செய்தி இந்திய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்த சூழலில் 3வது போட்டியில் தரமான பதிலடியை இந்தியா கொடுத்தது.

இதனையடுத்து இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தும் டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதற்கான இந்திய அணி தான் தற்போது சிக்கலில் உள்ளது.

வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச டெஸ்ட் தொடர்

இந்திய அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயத்தால் தொடரில் இருந்தே விலகியுள்ளனர். இவர்களுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரஃப் குமார் என இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஸ்டார் பவுலர்களான தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் போன்றோருக்கும் காயம் தான்.

இந்தியாவுக்கு நற்செய்தி

இந்தியாவுக்கு நற்செய்தி

இந்நிலையில் இந்திய அணிக்கு தற்போது நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளது. நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். வங்கதேசத்துடனான 3வது ஒருநாள் போட்டியின் போது பண்ட் விளையாடவில்லை. முதுகுவலி பிரச்சினை காரணமாக அவருக்கு சிகிச்சை அளித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகின. அவர் டெஸ்ட் தொடருக்கு வருவது சந்தேகம் என இருந்த சூழலில் தற்போது இந்த நற்செய்தி கிடைத்துள்ளது.

கம்பேக் தேவை

கம்பேக் தேவை

ரிஷப் பண்ட் சமீப காலமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் ரெக்கார்ட் சிறப்பாக உள்ளது. கடைசியாக ஆடிய டெஸ்டில் 146 மற்றும் 58 ரன்களை அடித்திருந்தார். எனவே இந்த டெஸ்ட் போட்டியிலும் பெரிய ஸ்கோரை அடித்தால் தான் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இத்தனை நாட்களாக ரிஷப் பண்ட் சொதப்பிய போதும், அவர் இடதுகை பேட்ஸ்மேன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக சஞ்சு சாம்சனை ஒதுக்கிவிட்டு, வாய்ப்பு தந்து வருகின்றனர். ஆனால் வங்கதேசத்துடனான 3வது ஒருநாள் போட்டியில் இடதுகை வீரர் இஷான் கிஷான் காட்டிய அதிரடியால், தற்போது பண்ட்-ன் இடத்திற்கு ஆபத்து உண்டாகியுள்ளதாக தெரிகிறது.

Story first published: Monday, December 12, 2022, 9:33 [IST]
Other articles published on Dec 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+