For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க”.. ஹர்ஷா கேட்ட நறுக்கென்ற கேள்வி.. ஆத்திரத்தில் பொங்கிய ரிஷப் பண்ட்!

க்ரைஸ்ட் சர்ச்: இந்திய கிரிக்கெட் விமர்சகர் ஹர்சா போக்லே கேட்ட ஒரு கேள்வியால் ரிஷப் பண்ட் கடுப்பாகி கூறிய பதில்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 - 0 என ஏற்கனவே பின் தங்கியிருந்ததால் 3வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து.

அதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாற்றம் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தான்.

இப்போ தெரியுதா சஞ்சு சாம்சன் அருமை.. ஒரே ஒரு வீரரால் தரைமட்டமான இந்திய அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள் இப்போ தெரியுதா சஞ்சு சாம்சன் அருமை.. ஒரே ஒரு வீரரால் தரைமட்டமான இந்திய அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

பண்ட்-ன் சொதப்பல்

பண்ட்-ன் சொதப்பல்

இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்-ன் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. எனினும் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு தரப்படுகிறது. இதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

கடுப்பான ரிஷப் பண்ட்

கடுப்பான ரிஷப் பண்ட்

இந்நிலையில் இதுகுறித்து பண்ட் கடும் கோபத்துடன் பதிலளித்துள்ளார். நியூசி,யுடனான 3வது போட்டிக்கு முன்பாக பண்ட்- உடன் ஹர்ஷா போக்லே நேர்க்காணல் நடத்தினார். அப்போது 50 ஓவர், 20 ஓவர் போட்டிகளை காட்டிலும் டெஸ்ட்டில் மட்டுமே பண்ட்-ன் சிறப்பாக இருக்கிறது, இது எதனால் என கேட்டார். இந்த கேள்வியால் சற்று கோபமடைந்த பண்ட், ரெக்கார்ட்கள் என்பது வெறும் எண்கள் தான். அதுமட்டுமல்லாமல் எனது 50 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர்கள் அவ்வளவு மோசமாக ஒன்றும் இல்லை என காட்டமாக கூறினார்.

நியாயமே இல்லை

நியாயமே இல்லை

தொடர்ந்து பேசிய அவர், செயல்பாடுகளை ஒப்பிடுவதில் தற்போது ஒரு நியாயமே இருக்காது. எனக்கு இப்போது தான் 24 - 25 வயது ஆகிறது. உங்களுக்கு ஒப்பிட வேண்டுமென்றால் நான் 30 - 32 வயதாக இருக்கும் போது வந்த ஒப்பிடுங்கள். அதற்கு முன்பு நீங்கள் என்ன கூறினாலும், அதை எந்தவிதத்திலும் நான் கண்டுக்கொள்ளவே மாட்டேன்.

கேப்டனின் முடிவு

கேப்டனின் முடிவு

டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் ஓப்பனிங் ஆட வேண்டும் என நினைக்கிறேன். டெஸ்டில் 4- 5 வது இடத்தில் இருங்க வேண்டும். பேட்டிங் ஆர்டர் மாற்றும் போது, திட்டங்களும் கண்டிப்பாக மாறுபடும். கேப்டன் பயிற்சியாளரும் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே நல்லதாக தான் இருக்கும். எனக்கு வாய்ப்பு கொடுக்கும் போதெல்லாம், எனது சிறந்த ஆட்டத்தை கொடுப்பேன் என பண்ட் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 30, 2022, 12:39 [IST]
Other articles published on Nov 30, 2022
English summary
Indian star batter Rishabh pant Furious over harsha bhogle after he asked questioned about Poor form
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X