Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நீ கத்திக்கிட்டே இரு.. நான் பேட்டிங் பண்ண மாட்டேன்".. களத்திலேயே சண்டை போட்ட பண்ட்.. பரபர வீடியோ!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் கோபம் அடைந்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 161 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். ரஹானே 67 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார்.

6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 300 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் கோபம் அடைந்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் நேற்று ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பாக ஆடினார். எப்போதும் போல தொடக்கத்தில் இருந்து சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து வெளுத்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

நாளின் கடைசி ஓவர்களில் பொதுவாக பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட மாட்டார்கள். ஆனால் ரிஷப் பண்ட் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி, கடைசி கட்டத்திலும் பவுண்டரிகளை அடித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து கீப்பர் பென் போக்ஸ் பின் பக்கம் நின்று கத்திக் கொண்டே இருந்தார்.

கத்தினார்

கத்தினார்

அதிக சத்தத்தில் போக்ஸ் கத்திக் கொண்டே இருந்தார். ஸ்பின் பவுலர் என்பதால் போக்ஸ் ஸ்டம்பிற்கு அருகில் நின்று கீப்பிங் செய்தார். இதனால் அவர் கத்துவது பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிற்கு இடைஞ்சலை ஏற்படுத்தியது. இரண்டு முறை இது குறித்து சொல்லியும் போக்ஸ் அமைதியாகாமல் தொடர்ந்து ரிஷப் பண்டை பார்த்து கத்திக் கொண்டே இருந்தார்.

கோபம்

கோபம்

இதனால் கடுமையாக கோபம் அடைந்த ரிஷப் பண்ட் நீ முடிஞ்ச வரைக்கு கத்து, நான் பேட்டிங் பண்ணவே மாட்டேன் என்று கோபம் அடைந்து அப்படியே நின்றுவிட்டார். பேட்டிங் செய்ய மறுத்து அப்படியே நின்றுவிட்டார். அதன்பின் நடுவரிடமும் இதை குறித்து புகார் அளித்தார்.

புகார்

இந்த நிலையில் பண்டிற்கு நெருக்கமான பென் ஸ்டோக்ஸ் நேரடியாக வந்து பண்டிடம் சமாதானம் பேசினார். நீங்க போய் பேட்டிங் பண்ணுங்க. இன்றைய நாள் ஆட்டம் முடிய போகும். ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது என்று கூறி சமாதானமாக போகும்படி கூறினார். இதன்பின்பே மீண்டும் பண்ட் பேட்டிங் இறங்க வந்தார்.

Story first published: Sunday, February 14, 2021, 8:58 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+