Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"102மீ சிக்ஸ்.. அதுவும் ஒத்த கைல" எப்போதும் ஒரே திட்டம்தான்.. வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய பண்ட்!

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிக்கும் வாய்ப்பை ரிஷப் பண்ட் தவறவிட்டதால், ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை 19 ரன்களுடன் தொடங்கியது. நிதான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய நிலையில், கேஎல் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணி திணறல்

இந்திய அணி திணறல்

தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 20 ரன்களிலும், புஜாரா 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதேபோல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வங்கதேச அணியின் டைஜுல் இஸ்லாம் பந்துவீச்சிற்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து திணறினர்.

ரிஷப் பண்ட் அதிரடி

ரிஷப் பண்ட் அதிரடி

இதனைத் தொடர்ந்து இணைந்த ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் இணை அதிரடியாக விளையாடியது. ரிஷப் பண்ட் தனக்கே உரிய பாணியில் சுழற்பந்துவீச்சாளர்களை தேடி தேடி அடித்தார். ஒரு கட்டத்தில் தனது ஸ்டைலில் ஒற்றை கைகளில் 102 மீட்டருக்கு சிக்சர் அடிக்க, 49 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

சிக்சர்கள் விளாசிய பண்ட்

சிக்சர்கள் விளாசிய பண்ட்

இதன் பின்னர் கியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற ரிஷப் பண்ட், சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார். இவருடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் சிக்சர் பவுண்டரி என்று விளாச, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதன் மூலம் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் 86 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

சதத்தை மிஸ் செய்த பண்ட்

சதத்தை மிஸ் செய்த பண்ட்

இதனைத் தொடர்ந்து தேநீர் இடைவேளைக்கு பின் களமிறங்கிய இந்திய அணி அதிரடியை தொடர்ந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகளாக விளாச, ரிஷப் பண்ட் வேகமாக 90களுக்குள் புகுந்தார். இதனால் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரிஷப் பண்ட் வெளியேறினார்.

Story first published: Friday, December 23, 2022, 16:20 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+