Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி தொடருக்குப்பின்...தோனியுடன் நேரம் செலவிட்ட ரிஷப் பண்ட்...அப்போ டெஸ்டில் செம வாணவேடிக்கை இருக்கு!

டெல்லி: ஆஸ்திரேலியா தொடரரில் பட்டய கிளப்பிய ரிஷப் பண்ட் அந்த தொடர் முடிந்த பிறகு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுள்ளார்.

தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கும் போட்டோவை சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தல தோனியின் எனர்ஜியும், விவேகமும் உங்களுக்கு கிடைக்கும் என்றும் பலரும் ரிஷப் பண்ட்டை பாராட்டி வருகின்றனர்.

சிங்கத்தை வீழ்த்திய இந்தியா

சிங்கத்தை வீழ்த்திய இந்தியா

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது அவ்வளவு எளிதில் மறக்காது. சீறு கொண்ட சிங்கத்தை(ஆஸ்திரேலியா) அதன் குகையிலேயே வீழ்த்தியது வேற லெவல் சம்பவம். அதுவும் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட சின்ன பையன்களை கொண்டு ஆஸ்திரேலியாவை அடக்கியதை வரலாறு என்றென்றும் பேசும்.

அசத்திய ரிஷப் பண்ட்

அசத்திய ரிஷப் பண்ட்

பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் 89 ரன்கள் எடுத்து நமது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். மூன்றாவது டெஸ்டிலும் 97 ரன்கள் எடுத்து இந்தியா தோல்வியை தவிர்க்க முக்கிய காரணமாக் இருந்தார் ரிஷப் பண்ட். இந்த தொடரில் 274 ரன்கள் எடுத்து இந்தியாவில் அதிக ரன்கள் எடுத்ததும் அவர்தான்.ஒரு காலத்தில் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்து பெரும் புகழ்பெற்ற பண்ட் அதன்பின்பு தனது பார்மை நிலையாக வைக்க தவறி விட்டார். அதன்பின்னர் எந்த ஒரு தொடரிலும் அவர் சோபிக்கவில்லை.

தோனி குடும்பத்தினருடன் போட்டோ

தோனி குடும்பத்தினருடன் போட்டோ

இதனால் அவர் மீது விமர்சனம் குவிந்தது. ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரிலும் இடம்பெற்றார் பண்ட். இதில் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீறு கொண்ட சிங்கமாக ரிஷப் பண்ட் விஸ்வரூபம் எடுத்து அனைவரையும் கவர்ந்து விட்டார். இங்கிலாந்து தொடரிலும் ரிஷப் பண்ட் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகு ரிஷப் பண்ட், இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் குடும்பத்தினருடன் செலவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கும் போட்டோவை சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பச்சை நிற தொப்பியுடன் தோனி இந்த போட்டாவில் இடம் பெற்றுள்ளார். இந்த 3 பேரின் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தல தோனியின் எனர்ஜியும், விவேகமும் உங்களை இங்கிலாந்து தொடரில் பட்டைய கிளப்ப வைக்கும் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Friday, February 5, 2021, 8:29 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+