Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ரிஷப் பண்டின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்.. வெளியான புதிய தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில் ரிஷப் பண்டின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது .

நேற்று நடைபெற்ற விபத்தில் ரிஷப் பண்ட் பிழைத்தது புது உசுரு என்று ரசிகர்கள் கூறினர். தற்போது அவருடைய உடல் நலத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ரிஷப் பண்டிற்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் இல் அவருடைய உடல் உறுப்புகள் நன்றாக இயங்குவதாக தெரியவந்துள்ளது.

வெளி காயம்

வெளி காயம்

மூளை மற்றும் முதுகுத்தண்டில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.தற்போது ரிஷப் பண்ட் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தனது தாயிடம் பேசியதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு போன்ற காயத்திற்கு மட்டும் தற்போது சிகிச்சை செய்தால் போதும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ரிஷப் பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை எங்கே?

சிகிச்சை எங்கே?

தற்போது மேல் சிகிச்சைக்காக ரிஷப் பண்டை டெல்லிக்கு கொண்டு செல்லலாமா? இல்லை மும்பைக்கு கொண்டு செல்லலாமா அல்லது லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லலாமா என்பது குறித்து மருத்துவர்கள் பேசி வருகின்றனர். மேலும் பிசிசியின் மருத்துவ குழு ரிஷப் பண்டின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க உள்ளது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

ரிஷப் பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதால் அவரை விரைவில் முழு உடல்நிலை கொண்டு வர பிசிசிஐ தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேலும் விபத்தால் ரிஷப் பண்ட் மனதளவில் பாதிக்க கூடாது என்பதற்காக அவருக்கு மனதத்துவ சிகிச்சை வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற விபத்துக்கு பிறகு வீரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

விரைவில் திரும்புவார்

விரைவில் திரும்புவார்

இதனால் பண்டை நாம் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே கிரிக்கெட் களத்தில் பார்க்கலாம் என்ற நல்ல செய்தி வெளிவந்திருக்கிறது.எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், நிச்சயமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்பதும் கேள்விக்குறியே. ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்திற்கு வர ஜூன் அல்லது ஜூலை மாதம் ஆகலாம் என கணிக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Saturday, December 31, 2022, 21:56 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+