Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறங்கி வந்து வெளுத்த சிக்ஸ்.. "இன்ட்ரா - ஸ்குவாட்" கிரிக்கெட்டில்.. ரிஷப் பண்ட் "காட்டடி"

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிக்கு தயாராகும் விதமாக நடந்த "இன்ட்ரா - ஸ்குவாட்" கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் பவுலர்களை ஓடவிட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய அணி இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.

இரண்டு அணிகளாக

இரண்டு அணிகளாக

அதென்ன இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்? பொதுவாக முக்கியமான டெஸ்ட் தொடர் அல்லது ஒருநாள் தொடர்களுக்கு முன்பாக, அணிகள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து கிரிக்கெட் ஆடுவது தான் இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட். அதற்கு இரு கேப்டன்கள், குறிப்பிட்ட ஓவர்கள் என்று சீரியஸான மேட்ச்சாகவே விளையாடுவார்கள்.

40 ஓவர் கிரிக்கெட்

40 ஓவர் கிரிக்கெட்

இந்த வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி, அங்கு இதுபோல் இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்டில் விளையாடியது. ஒரு அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், மற்றொரு அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாகவும் செயல்பட்டனர். தலா 40 ஓவர் கிரிக்கெட் போட்டியாக ஆடிய அந்த ஆட்டத்தில், கோலி அணியே வென்றது.

ஃபார்ம் கண்டறிய

ஃபார்ம் கண்டறிய

அதுபோல தான் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் இந்திய அணி நான்கு நாட்களுக்கு இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்டில் விளையாடி விளையாடுகிறது. இத்தனை நாட்களாக இங்கிலாந்தில் கடுமையான குவாராண்டைனில் இருந்த இந்திய அணிக்கு பயிற்சிப் போட்டிகள் என்று எதுவுமில்லை. எனவே, இந்த இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் அவர்களது திறனை, ஃபார்மை சோதிக்கும் முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்ட் மாஸ்

ரிஷப் பண்ட் மாஸ்

இதில், முதல் நாள் இன்ட்ரா - ஸ்குவாட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, புஜாரா, ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இதுகுறித்த ஒரு நிமிட வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பல வீரர்கள் விளையாடினாலும், ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தில் தான் அனல் பறந்திருக்கிறது.

சதமா? அரைசதமா?

குறிப்பாக, ஒரு ஸ்பின் பந்தில், இறங்கி வந்து ரிஷப் பண்ட் சிக்ஸ் அடிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பந்து வீசியது அஷ்வினாக இருந்திருக்கலாம். ஆனால், பந்து சிக்சருக்கு பறந்தது. அதுமட்டுமின்றி, அவர் பேட்டை உயர்த்தி காட்டுகிறார். ஸோ, கண்டிப்பாக அரைசதமோ அல்லது சதமோ அவர் அடித்திருக்க வேண்டும். நேற்றைய முதல் நாள், ரிஷப்பின் நாளாக அமைந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

Story first published: Saturday, June 12, 2021, 20:31 [IST]
Other articles published on Jun 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+