Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

90 ரன்களில் தொடர்ந்து ஆட்டமிழப்பது ஏன் ? ரிஷப் பண்ட் விளக்கம்.. மீண்டும் ஹீரோ ஆனார்

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தற்காலிக கேப்டன் கே எல் ராகுல் 10 ரன்களிலும், சுப்மான் கில் 20 ரன்களிலும், புஜாரா 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 24 ரன்களுக்கு வெளியேறினார்.இந்திய அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் களத்துக்கு வந்தார். வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் ஸ்கோரை அதிகப்படுத்தினார்.

ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் துணையாக நிற்க இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 93 ரன்களில் வெளியேறினார்.

யோசிப்பது கிடையாது

யோசிப்பது கிடையாது

ஸ்ரேயாஸ் ஐயரும் 87 ரன்கள் ஆட்டம் இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தடுமாறும் போது எல்லாம் களத்திற்கு வந்து காப்பாற்றும் ரிஷப் பண்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறை அரை சதமும், ஐந்து முறை சதமும் விளாசி இருக்கிறார். 90 ரன்களை கடந்த நிலையில் ஆறுமுறை ஆட்டம் இழந்திருக்கிறார்.இது குறித்து பேட்டி அளித்த ரிஷப் பண்ட், ஒரு வீரராக நான் எப்போதுமே சதங்களை குறித்து யோசிப்பது கிடையாது.

கவலைப்பட முடியாது

கவலைப்பட முடியாது

எனக்கு சதம் என்பது வெறும் நம்பர் மட்டும் தான். எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த நினைக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன். சதம் அடித்தால் மகிழ்ச்சியே. ஆனால் சதம் அடிக்கவில்லை என்றால் அது குறித்து கவலைப்பட முடியாது. ஆனால் அது நமது கையில் இல்லை. ஒரு தனி வீரராக இப்போது என்னுடைய பேட்டிங் குறித்து திருப்திகரமாக இருக்கிறேன்.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

பெரிய சதம் அடிக்க முடியாமல் அந்த வாய்ப்பை தவறவிட்டது உண்மைதான். ஆனால் நானும் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம் என்று ரிஷப் பண்ட் கூறினார். 87 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

50 ஓவர் கடந்த நிலையில் அந்த அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியை விட 61 ரன்கள் முன்னிலையாகும். இரண்டாவது இன்னிங்ஸில் எப்போதுமே பேட்டிங் செய்வது கடினம். இதனால் வெற்றி இலக்கு 100 அல்லது 150 ரன்கள் என இருந்தால் இந்தியாவுக்கு சிக்கல் இல்லை. அதற்கு மேல் சென்றால் இந்திய அணி அந்த இலக்கை எட்டுவது மிகவும் கடினமாகும்.

Story first published: Saturday, December 24, 2022, 14:25 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+