For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காதலியை அறிமுகம் செய்த ரிஷப் பண்ட்.. யார் என தெரிந்து கொள்ள பரபரக்கும் ரசிகர்கள்!

Recommended Video

காதலியை அறிமுகம் செய்த ரிஷப் பண்ட்- வீடியோ

டெல்லி : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் குறைந்த போட்டிகளிலேயே தன் திறமையை நிரூபித்து இந்திய அளவில் பிரபலமான வீரராக மாறி விட்டார்.

இந்த நிலையில், அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் தன் காதலியை அறிமுகம் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே புகைப்படத்தை அவரது காதலியும் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிரடியாக ரன் குவித்து தன் திறனை நிரூபித்தார். ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டியதாலும் ஆஸ்திரேலிய நாடு முழுவதும் பிரபலமடைந்து விட்டார். அவர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவதால் சிறிது ஓய்வு அளிக்கப்பட்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

காதலி அறிமுகம்

இந்தியாவில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் தன் காதலி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் உலகத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரிஷப் பண்ட் தன் பதிவில் "நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், நான் மகிழ்ச்சியாக இருக்க நீதான் காரணம்" என கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி

சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி

இந்த புகைப்படத்திற்கு பிரபலங்களில் முதல் ஆளாக சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சியை குறிக்கும் வகையில் கமண்ட் போட்டுள்ளார். மேலும், நான்கு லட்சத்துக்கும் மேல் லைக் அள்ளியுள்ளது இந்த பதிவு.

காதலி யார்?

ரிஷப் பண்ட் வெளியிட்ட அதே புகைப்படத்தை அவரது காதலியும் வெளியிட்டுள்ளார். அவரது காதலி பெயர் இஷா நெகி என்பது மட்டுமே தெரிந்த நிலையில் ரசிகர்கள் அவர் யார் என தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

சடாரென உயர்ந்த ஃபாலோயர்கள்

சடாரென உயர்ந்த ஃபாலோயர்கள்

இஷா நெகி பற்றி தெரிந்து கொள்ள பலரும் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால், சில ஆயிரங்கள் மட்டுமே இருந்த அவரது ஃபாலோயர்கள் சடாரென 40,000-த்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

டிம் பெய்ன் மனைவி

டிம் பெய்ன் மனைவி

சமீபத்தில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆனது. அதன் பின் டிம் பெய்ன் மனைவி போனி பெய்ன்-இன் ஃபாலோயர்கள் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்தனர். அதே போல, இஷா நெகிக்கும் நடந்துள்ளது.

ஏதும் வம்பு வருமோ?

ஏதும் வம்பு வருமோ?

ராகுல் - பண்டியா என இரண்டு இந்திய வீரர்கள் தேவையற்ற பேச்சுக்களால் சர்ச்சைக்குள் சிக்கி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பண்ட் தன் காதலியை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால், அவருக்கு ஏதும் வம்பு வருமோ என சிலர் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, January 17, 2019, 15:49 [IST]
Other articles published on Jan 17, 2019
English summary
Rishabh Pant introduced his girlfriend in Instagram and fans are following her rapidly
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+