For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவோட நெருக்கடி சூழல்களை அப்படியே மாத்திடுவாரு... ரிஷப் பந்த் பத்தி யாரு சொல்லியிருக்காரு?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் 91 ரன்களை குவித்துள்ளார் ரிஷப் பந்த்.

73 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தவித்த நிலையில், 91 ரன்களை அடித்து புஜாராவுடன் பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்துள்ளார் பந்த்.

இந்நிலையில் நெருக்கடியான சூழலில் இருந்து அணியை காப்பாற்றும் திறமை இயற்கையாகவே பந்த்திற்கு உள்ளதாக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2வது இன்னிங்சில் இங்கிலாந்து

2வது இன்னிங்சில் இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் தற்போது இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் 73 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறிய நிலையில் பந்த்தின் பங்கு அபாரமாக இருந்தது.

உயர்ந்த அணியின் ஸ்கோர்

உயர்ந்த அணியின் ஸ்கோர்

ரிஷப் பந்த் 91 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் நெருக்கடி சூழல்களில் இந்திய அணியை காப்பாற்றும் திறமை ரிஷப் பந்த்திற்கு இயற்கையாகவே அமைந்துள்ளதாக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயல்பாக விளையாட வேண்டும்

இயல்பாக விளையாட வேண்டும்

மேலும் தான் எப்போதுமே பந்த் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதில்லை என்றும், அவ்வாறு அவர் மனதில் பல்வேறு விஷயங்களை புகுத்தினால், அவர் தானாக விளையாடாமல் பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாட துவங்கிவிடுவார் என்றும் அது அவருக்கும் இந்திய அணிக்கு பலனை கொடுக்காது என்றும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

சதமடிக்கும் வாய்ப்பு

சதமடிக்கும் வாய்ப்பு

கடந்த ஆஸ்திரேலியா மற்றும் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பான ஆட்டங்களை அளித்து வருகிறார் ரிஷப் பந்த். ஆயினும் தொடர்ந்து சதமடிக்கும் வாய்ப்புகளை இழந்து வருகிறார். சதத்திற்கு அருகில் வந்துஅவர் அதனை இழந்து வருகிறார். அவர் பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்று புஜாரா அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 8, 2021, 14:20 [IST]
Other articles published on Feb 8, 2021
English summary
I would never want Pant to change -Gautham Gambhir
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+