Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் அணுகுமுறை சரியா? இந்திய அணியின் எதிர்பார்ப்பு என்ன? பயிற்சியாளர் பராஸ் சொன்ன வார்த்தை!

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக தயாராகி வருவதாக பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் டிச.14ம் தேதி தொடங்க உள்ளது.

இதனிடையே வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறினார். அதேபோல் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ஜடேஜாவும் முழுமையாக காயத்தில் இருந்து குணமடையவில்லை.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.

சிறப்பாக விளையாடுகிறார்

சிறப்பாக விளையாடுகிறார்

ரிஷப் பண்ட்-டிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது அவருக்கு நன்றாக தெரியும். களமிங்கிய முதல் நொடி முதலே எதிரணிக்கு பிரஷர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார். அதற்கான வழக்கம் போல் சிறப்பாக தயாராகி வருகிறார் என்று தெரிவித்தார்.

நாளை வரை காத்திருங்கள்

நாளை வரை காத்திருங்கள்

தொடர்ந்து இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குமா என்ற கேள்விக்கு, பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அதனால் உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் அணியில் நிச்சயம் இடம்பெறுவார்கள். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இருப்பாரா என்பது நாளை தெரியும். இந்திய அணி நான்கு மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது.

 பந்துவீச்சாளர்களின் ஈடுபாடு

பந்துவீச்சாளர்களின் ஈடுபாடு

அதனால் உமேஷ் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து உள்ளூர் மற்றும் இந்திய ஏ அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதிக அனுபவம் கொண்டு வீரர். அதேபோல் சிராஜ் ஒருநாள் மற்றும் இந்திய ஏ அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

சிராஜின் வளர்ச்சி

சிராஜின் வளர்ச்சி

சில நேரம் உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு மாறுவதற்கு நேரம் பிடிக்கும். ஆனால் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து பயிற்சியில் இருந்துள்ளனர். அதனால் பிரச்சினையில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜ் வெளிப்படுத்தும் வரும் ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, December 13, 2022, 21:46 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+