காயத்திலிருந்து மீண்டு பிட்டான பந்த்... பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலக்க காத்திருப்பு
துபாய் : இன்றைய ஐபிஎல்லின் 38வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்னும் சில போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த அணிகள் உள்ளதால் வெற்றிக்கு இரு அணிகளுமே தீவிரம் காட்டும்.
கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்காமல் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ரிஷப் பந்த் இன்றைய போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி -பஞ்சாப் அணிகள் மோதல்
ஐபிஎல்லின் 38வது லீக் போட்டியில் இன்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பு
ஆயினும் அந்த அணியின் ஸ்பின் பௌலர் ஆர் அஸ்வின், ரிஷப் பந்த் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து காயம் காரணமாக அணியிலிருந்து விலகியது அணிக்கு மிகுந்த பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் காயம் சரியாகி அஸ்வின் அணியில் இணைந்த நிலையில் தற்போது பந்த்தும் இன்றைய ஆட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரிஷப் இணைவதால் தீர்வு
காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ரிஷப் பந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அணியில் ரஹானே இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் ரிஷப் பந்த் அணியில் இணைவதன்மூலம் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் இறுதி முடிவு
இதனிடையே, அவர் பிட்டாக இருப்பதாகவும் ஆயினும் இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அணியின் வலிமை மேலும் கூடும் எனவும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications