Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பந்த் சூப்பரா இருக்காரு... அடுத்த போட்டியிலயும் விளையாடுவாரு... ரஹானே உறுதி

சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

இந்த போட்டியில் காயத்தால் அவதியுற்ற நிலையிலும் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய ரிஷப் பந்த் 97 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது போட்டியிலும் பங்கேற்று விளையாடுவார் என்று கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் டிரா

3வது டெஸ்ட் டிரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 407 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி போட்டியை டிரா செய்துள்ளது.

97 ரன்களை அடித்த ரிஷப்

97 ரன்களை அடித்த ரிஷப்

இந்த போட்டியில் ரிஷப் பந்த் காயத்தின் இடையிலும் சிறப்பாக விளையாடி 97 ரன்களை குவித்தார். சதமடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்ட நிலையிலும் இந்த ஸ்கோர் மற்றும் புஜாராவின் 77 ரன்கள் ஆகியவையே இன்றைய போட்டி டிரா ஆக காரணமாக அமைந்தது.

ரிஷப் விளையாடுவார் -கேப்டன்

ரிஷப் விளையாடுவார் -கேப்டன்

இந்நிலையில் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது மற்றும் இறுதிப்போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே, அடுத்த போட்டியில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தள்ளார்.

முக்கியத்துவம் பெற்றுள்ள 4வது போட்டி

முக்கியத்துவம் பெற்றுள்ள 4வது போட்டி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்று முடிந்துள்ள 3வது போட்டி டிரா ஆகியுள்ளது. இதையடுத்து பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது மற்றும் இறுதிப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Story first published: Monday, January 11, 2021, 18:42 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+