Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு சிறிய அறையில் வசித்த ரிஷப் பண்ட்டின் குடும்பம்.. தாயின் கவலையை போக்கிய குறும்பு மகன்

Recommended Video

ஒரு சிறிய அறையில் வசித்த ரிஷப் பண்ட்டின் குடும்பம்- வீடியோ

டெல்லி : ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததோடு, ஆஸ்திரேலிய வீரர்களை வம்பிழுப்பதிலும் அனைவரையும் ஈர்த்தார்.

இது பற்றி அவரது தாய் கருத்து கூறியுள்ளார். ரிஷப் பண்ட் சிறு வயதில் இருந்தே குறும்புத்தனம் மிக்கவர் என கூறினார் அவர்.

சீண்டல்கள்

சீண்டல்கள்

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாட் கம்மின்ஸ், கவாஜா, கேப்டன் டிம் பெய்ன் என ஆஸ்திரேலிய வீரர்களை குறி வைத்து சீண்டினார். அதிலும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்-க்கும், பண்ட்டுக்கும் இடையே ஆன சீண்டல்கள் எல்லை மீறின.

குறும்பு வேலைகள்

குறும்பு வேலைகள்

இந்தியா தொடரை வென்ற பின் அமைதியான குணம் கொண்ட புஜாராவை கிண்டல் செய்து நடனம் ஆட வைத்தார் பண்ட். என்ன இந்த தம்பி ஓவர் குறும்பு பண்றாரே என நினைத்தால், அவர் அப்படி தான் என்கிறார் அவரது தாய்.

புதிய யோசனை செய்யும் பண்ட்

புதிய யோசனை செய்யும் பண்ட்

ரிஷப் பண்ட்டின் தாய் ஒரு சிறிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தன் மகன் பற்றி கூறுகையில், "ரிஷப் குறும்புக்கார பையன். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த புதிய யோசனை ஏதாவது செய்வான்" என கூறினார்.

கடினமான வாழ்க்கை

கடினமான வாழ்க்கை

ரிஷப் பண்ட் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அவர் தாய் மற்றும் சகோதரியுடன் சிறிய அறையில் தான் வசித்து வந்துள்ளார். ரிஷப் எப்போதுமே தன் தாயிடம் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறுவாராம். அவர் தான் சொல்லிய படி இன்று தன் தாயை கவலைப்பட விடாமல் அதிரடியாக இந்திய அணியில் தன் இடத்தை நிலை நாட்டிக் கொண்டுள்ளார்.

ஜாம்பவான்களை அசத்திய பண்ட்

ஜாம்பவான்களை அசத்திய பண்ட்

ஆஸ்திரேலியாவில் அவரது பேட்டிங்கை கண்டு முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் அவரது ரசிகர்களாகவே மாறி விட்டார்கள். இந்த தொடரில் கோலியை விட அதிக ரன்கள் அடித்தவர் ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர விக்கெட் கீப்பர்

நிரந்தர விக்கெட் கீப்பர்

கங்குலி ரிஷப் பண்ட் தான் எதிர்காலத்தில் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருப்பார் என கூறி புகழாரம் சூட்டினார். தோனி ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், ரிஷப் பண்ட் அவரது இடத்தை நிரப்புவரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Story first published: Wednesday, January 9, 2019, 14:38 [IST]
Other articles published on Jan 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+