Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்து ஏ எதிரான 2 டெஸ்ட்.. இந்திய ஏ அணியிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்.. அதிரடி வீரருக்கு இடம்

மும்பை: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட அனதிகாரப்பூர்வ டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் குஷாக்ரா இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக நடைபெற்ற இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வழிநடத்தியபோது, ரிஷப் பண்டிற்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து, நியூசிலாந்து ஏ தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பண்ட் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Rishabh Pant

மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து அவரது உடல்தகுதியின் அடிப்படையில் பின்னர் முடிவெடுக்கப்படும்.பண்டிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள 21 வயதான குமார் குஷாக்ரா, இதுவரை 38 முதல்தர போட்டிகளில் விளையாடி 2507 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதம் விளாசி இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட் அபாரம்.. 41 பந்துகளில் 85 ரன்கள் குவிப்பு.. 5 சிக்சர் விளாசல்

ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட் அபாரம்.. 41 பந்துகளில் 85 ரன்கள் குவிப்பு.. 5 சிக்சர் விளாசல்

மேலும் துலீப் கோப்பை இறுதிப்போட்டியிலும் கிழக்கு மண்டல அணிக்காக முதலாவது இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களும் சேர்த்திருந்தார். நியூசிலாந்து ஏ தொடரில் இந்தியா ஏ அணியை துருவ் ஜூரெல் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோருடன் தேவ்தத் படிக்கல், பா. சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் அனதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 முதல் 27 வரை லிங்கனில் உள்ள பெர்ட் சட்க்ளிஃப் ஓவல் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது போட்டி அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

IND vs WI: திலக் வர்மா கடற்கரையில் நடப்பது போல் ரன் அவுட் ஆகிவிட்டார்.. சடகோபன் ரமேஷ் கடும் சாடல்

Also Read

IND vs WI: திலக் வர்மா கடற்கரையில் நடப்பது போல் ரன் அவுட் ஆகிவிட்டார்.. சடகோபன் ரமேஷ் கடும் சாடல்

இந்தியா ஏ அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் செயல்படுவார். பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், பா. சாய் சுதர்சன், ரவிச்சந்திரன் ஸ்மரன் மற்றும் யாஷ் ரத்தோடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சாளர்களாக ஆகாஷ் தீப், முகேஷ் குமார், அவ்கிப் நபி, அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது போட்டிகளுக்கான மாற்று விக்கெட் கீப்பராக குமார் குஷாக்ரா அணியில் செயல்படுவார்.

Story first published: Tuesday, October 13, 2026, 6:30 [IST]
Other articles published on Oct 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+