Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டுல 500 ரன்கள் குவிப்பு... முதல் விக்கெட் கீப்பராக பந்த் சாதனை!

சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 407 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. ரிஷப் பந்த் 97 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 500 ரன்களை குவித்துள்ள முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை இன்றைய போட்டி மூலம் ரிஷப் பந்த்திக்கு கிடைத்துள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 407 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சில் 5வது நாள் ஆட்டத்தை இந்தியா ஆடி வருகிறது.

ரிஷப் பந்த் சிறப்பு

ரிஷப் பந்த் சிறப்பு

நேற்றைய 4வது நாள் ஆட்ட முடிவில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 98 ரன்களுடன் ஆட்டத்தை முடித்த நிலையில், இன்றைய 5வது நாள் ஆட்டத்தை இந்தியா துவங்கியுள்ளது. இதில் காயம் ஏற்பட்ட நிலையிலும் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடி 97 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் இந்திய விக்கெட் கீப்பர்

முதல் இந்திய விக்கெட் கீப்பர்

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 500 ரன்களை எடுத்துள்ள முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இன்றைய போட்டியின்மூலம் ரிஷப் பந்த் மேற்கொண்டுள்ளார். கடந்த 3வது நாள் ஆட்டத்தின்போது கையில் காயம் ஏற்பட்டாலும் தனது மன உறுதியை விடாமல் இந்த சாதனையை அவர் மேற்கொண்டுள்ளார்.

ஸ்ப்ரே கொண்டு நீக்கம்

ஸ்ப்ரே கொண்டு நீக்கம்

ஆஸ்திரேலியாவில் விளையாடியுள்ள கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 25 ரன்களுக்கு மேல் எடுத்தும் சாதித்துள்ளார் பந்த். ஆஸ்திரேலியாவில் வேறெந்த வெளிநாட்டு வீரரும் இந்த சாதனையை இதுவரை புரிந்ததில்லை. கையில் ஏற்பட்ட காயம் தந்த வலியை ஸ்ப்ரே கொண்டு போக்கிக்கொண்டு அவர் தொடர்ந்து ஆடி 97 ரன்களை குவித்தார்.

Story first published: Monday, January 11, 2021, 10:21 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+