Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியான ரிஷப் பண்டின் மெடிக்கல் ரிப்போட்.. உடலில் பல இடங்களில் காயம்.. ஒரு நல்ல செய்தியும் இருக்கு

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்று கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனினும் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பண்டின் கார் சுக்கு நூறாக நொறுங்கி தீயில் பற்றி எரிந்து இருக்கிறது .இதன் காரணமாக அவருடைய உடல்நிலை எந்த அளவுக்கு இருக்கும் என்று ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இதனை அடுத்து ரிஷப் பண்ட் தற்போது டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.பண்டிற்கு அனைத்து சிகிச்சைகளையும் வழங்குவோம் என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

ஜெய்ஷா உறுதி

ஜெய்ஷா உறுதி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் பண்டின் குடும்பத்தினருடன் பேசினேன். அவருக்கு எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். ரிஷப் பண்டிற்கு என்ன சிகிச்சை வேண்டுமோ அதனை உயர்தர வசதியில் அளிக்க பிசிசிஐ முழு உதவியும் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .

என்ன காயங்கள்

என்ன காயங்கள்

ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. வலது கால் முட்டியில் தசை நார் கிழிந்து இருக்கிறது. வலது கை மணிக்கட்டு , கணுங்கால் பாதம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் ரிஷப் பண்டிற்கு உள் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

ஸ்கேன் சோதனை

ஸ்கேன் சோதனை

மேலும் பண்டின் உடல் உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிகிறது. எனினும் காயங்களின் ஆழத்தை அறிவதற்காக மேலும் பல கட்ட ஸ்கேன்கள் ரிஷப் பண்டிற்கு எடுக்கப்பட உள்ளது. வலி தெரியாமல் இருக்க பண்டிற்கு வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட் சுமார் 45 நாட்கள் வரை மருத்துவமனையில் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

6 மாதம் ஆகலாம்

6 மாதம் ஆகலாம்

இதனை அடுத்து அவர் பழைய மாதிரி திரும்ப ஆறு மாதங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல், ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் பண்ட் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. ரிஷப் பண்ட் விளையாடாமல் இருந்தாலும் அவர் உயிருடன் இருப்பதே எங்களுக்கு போதும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Friday, December 30, 2022, 18:50 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+