
தென்னாப்பிரிக்க போட்டி
லீக் சுற்றில் இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 30ம் தேதியன்று பெர்த்-ல் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றதை போல இந்த போட்டியில் இந்தியா வெல்வது கடினமாகும்.

தீராத சிக்கல்
இந்தியாவை போலவே தென்னாப்பிரிக்க அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறது. ரன் ரேட்டிலும் +5.200 என அட்டகாசமான நிலையில் உள்ளது. இந்த அணியை சமாளிக்க வேண்டுமென்றால் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி அதிக ரன்களை குவிக்க வேண்டும். அதற்கு முதல் சிக்கலாக இருப்பது இந்தியாவின் ஓப்பனிங் தான்.

சொதப்பும் கே.எல்.ராகுல்
ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ள போதும், கே.எல்.ராகுல் சொதப்பி வருகிறார். அதுவும் புதிய பந்தில் வரும் இன் ஸ்விங் பந்துகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பிரச்சினையை சரி செய்ய ரிஷப் பண்ட்- ஐ உள்ளே கொண்டு வர ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்க போட்டியிலேயே அதனை செய்யப்போவதில்லை.

கடைசி வாய்ப்பு
ஓப்பனிங் வீரராக ரிஷப் பண்ட் நல்ல அதிரடியை காட்டுவார். எனவே ஒருவேளை தென்னாப்பிரிக்க போட்டியிலும் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடவில்லை என்றால் பண்ட்-க்கு வாய்ப்பு சென்றுவிடும். ஏனென்றால் அரையிறுதிக்கு செல்லும் போது பவுலிங் தரமாக இருக்கும் என்பதால் ஓப்பனிங் நன்றாக இருக்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications