Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்க்கு பச்சை சிக்னல் கொடுத்த பிசிசிஐ.. யாருக்கு பதில் தெரியுமா? அதிரடி முடிவு

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகிறது.

Recommended Video

AsiaCup 2022 Rohit Sharma-க்கு Captaincy பயம் வந்துடுச்சி - Mohammed Hafeez *Cricket

இதில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போட்டிக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில், இது தொடர்பாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், அணியின் நிலை மற்றும் சூழல் கருதி வீரர்கள் அணியில் இடம்பெறாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

ராகுலுக்கு இடமில்லை

ராகுலுக்கு இடமில்லை

மேலும், இது குறித்து நான் வீரர்களிடம் பேசி விட்டேன். அணியில் வீரர்கள் இடம்பெறாமல் போனதற்கு திறமை காரணம் அல்ல என்பதை புரியவைத்துவிட்டேன் என்று கூறினார். டிராவிட்டின் இந்த பேச்சுக்கு, இந்திய அணியில் இனி கேஎல் ராகுலுக்கு இடமில்லை என்பதையே குறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தன்னலமான ஆட்டம்

தன்னலமான ஆட்டம்

கேஎல் ராகுல் திறமையான வீரராக அறியப்பட்டாலும், டி20 போட்டியில் அவர் அணிக்கு கூடுதல் சுமையாக தான் விளங்குகிறார். குறைந்த பந்தில் அதிக ரன் எடுக்கும் அம்சம் உடைய வீரர் தான் டி20 போட்டிகளுக்கு தேவை. ஆனால் ராகுல் ஆட்டம் அதற்கு ஏற்றார் போல் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. லக்னோ அணி ஐபிஎல் போட்டியில் தோற்றதுக்கு ராகுலின் தன்னலமான ஆட்டமே காரணம் என்றும் கூறப்பட்டது.

கிரின் சிக்னல்

கிரின் சிக்னல்

தற்போது ராகுல் காயத்திலிருந்து திரும்பிய பிறகும், அவருடைய ஆட்டம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கத்துக்குட்டி அணியான ஹாங்காங்க்கு எதிராக 36 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் ராகுலை அணியிலிருந்து நீக்கி, அந்த இடத்தில் ரிஷப் பண்டை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கு பிசிசிஐயும் கிரின் சிக்னல் கொடுத்துள்ளது.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆவேஷ் கான் அதிரடியாக நீக்கப்பட்டு, அஸ்வின் அல்லது ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று விராட் கோலிக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்துவிட்டு தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, September 4, 2022, 18:39 [IST]
Other articles published on Sep 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+