Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கோட்டைசாமி' ரிஷப் பண்ட்.. தலையில் அடித்துக் கொண்ட அஷ்வின் - வைரல் வீடியோ

சென்னை: பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டாலும், விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை கவலை கொள்ளும் வகையிலேயே உள்ளார் ரிஷப் பண்ட்.

கடந்த ஆஸ்திரேலிய தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர் ரிஷப் பண்ட். ரிதிமான் சாஹாவுக்கே விக்கெட் கீப்பிங்கில் கோலி முன்னுரிமை கொடுத்தார்.'

Rishabh Pant misses easy stumping chance off Ashwin video

ஆனால், அப்போட்டியில் இந்தியா தோற்று, பிறகு ரிஷப் பண்ட் உள்ளே வந்து மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் ஆடிய கதை அனைவருக்கும் தெரியும். இப்போது, கோலி மனதில் மட்டுமில்லாமல், ரசிகர்கள் மனதிலும் இந்திய விக்கெட் கீப்பருக்கான முதல் ஆப்ஷன் ரிஷப் தான்.

ஆனால், ஆஸி., தொடரிலேயே அவரது விக்கெட் கீப்பிங் மிகச் சுமாராக இருந்தது. பல கேட்சுகளை அவர் தவறவிட்டார். அவையெல்லாம் கடினமான வாய்ப்புகள் என்று கூட சொல்ல முடியாது. எல்கேஜி பிள்ளைகள் பிடித்து அவுட் செய்யும் அளவுக்கான அத்தனை ஈஸியான வாய்ப்புகளை கூட அவர் தவறவிட்டார்.

இப்போது சென்னையிலும் அதே சொதப்பலை கச்சிதமாக தொடர்ந்து வருகிறார். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் காலை பொழுதில், அஷ்வின் பந்துவீச்சை எதிர்கொண்ட ஜேக் லீச் கிரீஸை விட்டு நன்றாக வெளியே வந்துவிட்டார்.

அல்வா போன்று கையில் வந்து விழுந்த பந்தை தவறவிட்டு, மிக மிக எளிதான ஸ்டெம்பிங் வாய்ப்பை கோட்டைவிட்டார் ரிஷப். கடுப்பான அஷ்வின் களத்திலேயே தலையில் அடித்துக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, February 7, 2021, 17:25 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+