Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் பதவி ஆனால் இந்திய அணியில் இல்லை.. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மட்டும் இடம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்படாத நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டிற்கு, ரஞ்சி சாம்பியன் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் கே.எல்.ராகுலுக்கு துணையாக மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, ரிஷப் பண்ட் அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார்.

Rishabh Pant Named Rest of India Captain for Irani Cup After Being Omitted from West Indies ODI Squad

நீண்ட காலமாக ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ரிஷப் பண்ட்டிற்கு, இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வழிநடத்தும் பொறுப்பைத் தேர்வுக்குழு ஆறுதலாக வழங்கியுள்ளது. கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்த்து இந்த அணி மோதவுள்ளது. இந்த அணியின் துணை கேப்டனாக சர்பராஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி: ரிஷப் பண்ட் (கேப்டன்), சனத் சங்வான், ஷிகர் மோகன், சுதீப் கராமி, சர்பராஸ் கான் (துணை கேப்டன்), ஸ்மரன் ரவிச்சந்திரன், மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், முகேஷ் சவுத்ரி, ஆர்யன் ஜுயல் (விக்கெட் கீப்பர்), ஆர்யன் பாண்டே, அனுகுல் ராய், ஆயுஷ் தோசேஜா.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தனது இடத்தை இழந்த ரிஷப் பண்ட், மீண்டும் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இரானி கோப்பை தொடர் ஒரு டெஸ்ட் போட்டி என்பதால் இதில் ஆடும் ஆட்டம் பண்ட்டுக்கு ஒருநாள் அணி வாய்ப்பை பெறவும் உதவாது.

அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்தான்.. இளம் ஆல்-ரவுண்டர் ஏசியன் கேம்ஸில் நீக்கம்.. ODI அணியில் சேர்ப்பு

அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்தான்.. இளம் ஆல்-ரவுண்டர் ஏசியன் கேம்ஸில் நீக்கம்.. ODI அணியில் சேர்ப்பு

2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு இல்லை என்பதையே பிசிசிஐ தேர்வுக் குழுவின் இந்த முடிவு காட்டுகிறது. இந்திய ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க கே எல் ராகுலுடன் இஷான் கிஷன், துருவ் ஜுரல் போட்டி போட்டு வருகின்றனர். எனவே ரிஷப் பண்ட்டுக்கு ஒருநாள் அணி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

IND vs WI: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு.. 2 புதிய முகங்கள்.. ரோஹித், கோலிக்கு இடம்

Also Read

IND vs WI: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு.. 2 புதிய முகங்கள்.. ரோஹித், கோலிக்கு இடம்
Story first published: Thursday, September 17, 2026, 0:04 [IST]
Other articles published on Sep 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+