For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC ஃபைனலில் சொதப்பினாலும்.. எகிறும் ரிஷப் பண்ட் சொத்து மதிப்பு.. 4 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி

மும்பை: இந்தியாவின் எதிர்காலம்.. இந்திய அணியின் ஃபியூச்சர் தோனி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ரிஷப்பின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

இதனால், இந்திய அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள், கருத்து மோதல்கள் என்று கடந்த மூன்று நாட்களாக சமூக தளங்களில் அனல் வீசுகிறது.

ஏமாற்றிய ஹீரோக்கள்

ஏமாற்றிய ஹீரோக்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை. டாப் வீரர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு சொதப்பினார்கள். குறிப்பாக, புஜாரா. இவர் உண்மையில் ஃபார்மில் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத அளவுக்கு விளையாடிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், இந்த இறுதிப் போட்டியின் எக்ஸ்-ஃபேக்ராக கருதப்பட்ட ரிஷப் ஒன்றுமே செய்யாதது மிகப்பெரிய ஏமாற்றம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த விதத்தால் அவர் மீது எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடந்தன. ஆனால், அவரால் இரண்டாம் இன்னிங்ஸின் இறுதிக்கட்டத்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

 சப்போர்ட்

சப்போர்ட்

இதனால் ரிஷப் பண்ட் மீது அதிருப்தி காரணமாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ஏதோ ஒரு கோடீஸ்வர வீட்டுப் பையன் விளையாடுவது போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பண்ட் விளையாடி இருக்கிறார்" என்று போட்டுத் தாக்கினார். இப்படி விமர்சனங்கள் ஒருபக்கம் வர, மறுபக்கம் அவரை தாங்கிப் பிடிக்கும் கருத்துகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அடேங்கப்பா

அடேங்கப்பா

அடுத்ததாக, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் சொதப்பினாலும், ரிஷப் பண்ட்டின் சொத்து மதிப்பு நம்மை வியக்க வைக்கிறது. வெறும் 23 வயதே ஆன ரிஷப் தான் அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்ற பெயரை அவர் ஏறக்குறைய எடுத்துவிட்டார். இன்னும் சில தரமான இன்னிங்ஸ்களை ஆடிவிட்டால் போதும். அந்த நிரந்தர பெயரை பிடித்துவிடலாம். சரி.. அவரது நெட் ஒர்த் எவ்வளவு தெரியுமா? சமீபத்திய அறிக்கைகளின் படி, 2021ல் ரிஷப்பின் சொத்து மதிப்பு 36 கோடி. ஒவ்வொரு சர்வதேச மேட்சுக்கும் அவர் வாங்கும் சம்பளம் 2 லட்சம் +. மாதம் 30 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். வருடத்திற்கு 10 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்.

தோனியை விட

தோனியை விட

2017ல் 0.6 மில்லியன் டாலர், 2018ல் 1.3 மில்லியன் டாலர், 2019ல் 2 மில்லியன் டாலர், 2020ல் 3.1 மில்லியன் டாலர், 2021ல் 5 மில்லியன் டாலர் என்று அவரது சொத்து மதிப்பு, வேல்யூ ஒவ்வொரு வருடமும் எகிறி வருகிறது. 23 வயதில், கிரிக்கெட்டில் கலக்கி வரும் ரிஷப் பண்ட், தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் புகழிலும் சரி.. வருமானத்தில் சரி.. தோனியை ஒருபடி மிஞ்ச கூட வாய்ப்புள்ளது. ஆனால், அது அவர் கையில் தான் உள்ளது.

Story first published: Saturday, June 26, 2021, 21:36 [IST]
Other articles published on Jun 26, 2021
English summary
rishabh pant net worth income - ரிஷப் பண்ட் சொத்து மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+