Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் செய்யப் போகும் மாபெரும் டெஸ்ட் மைல்கல் சாதனை.. எந்த இந்திய வீரரும் இதற்கு முன் செய்யலை

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைக்க உள்ளார். இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 15 அன்று கல்லே சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான ரிஷப் பண்ட், இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 சிக்சர்களை விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் பண்ட், இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையைப் படைப்பார்.

Rishabh Pant on verge of huge milestone 3 sixes away from 100 test sixes mark

இந்திய அளவில் வீரேந்திர சேவாக் 90 சிக்சர்களுடனும், ரோஹித் சர்மா 88 சிக்சர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஆடம் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்), பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்சர்கள்) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (138 சிக்சர்கள்) ஆகிய 3 வீரர்கள் மட்டுமே 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான தொடரில் 3 சிக்சர்களை அடிப்பதன் மூலம் இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் 4வது உலக வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பண்ட் பெறுவார்.

இது தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பண்ட் மேலும் சில சாதனைகளை செய்ய வாய்ப்பு உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 2,780 ரன்கள் குவித்துள்ள அவர், மேலும் 220 ரன்கள் எடுத்தால் இந்தத் தொடரின் வரலாற்றில் 3,000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைப்பார். மேலும், 77 சிக்சர்களுடன் உள்ள ரிஷப் பண்ட், இன்னும் 12 சிக்சர்கள் அடித்தால் பென் ஸ்டோக்ஸின் 88 சிக்சர்கள் என்ற சாதனையை முறியடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையையும் செய்வார்.

Story first published: Friday, August 7, 2026, 9:08 [IST]
Other articles published on Aug 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+