
ஆட்டத்தின் திருப்பம்
இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரென்கள் தேவைப்பட்டது. அப்போது ஆர்ஷ்தீப் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது, அது விக்கெட் கீப்பரிடம் பிடிப்பட்டது. அந்த பந்தை ரிஷப் பண்ட் ரன் அவுட் செய்யும் வகையில் ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஆனால் அது ஸ்டம்பில் படாமல், பந்துவீச்சாளரிடம் சென்றது. ஆர்ஸ்தீப்பும் ரன் அவுட் செய்ய முயல, அது ஓவர் த்ரோவாக இலங்கை வீரர்கள் 2 ரன்களை சுலபமாக ஓடி ஒரு பந்து எஞ்சிய நிலையில் வென்றனர்.

பண்ட் செய்த தவறு
இந்த நிலையில், எப்போதுமே விக்கெட் கீப்பர் தனது சிறிய புத்தாசாலித்தனம் மூலம் ஆட்டத்தின் முடிவில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். அப்படி ஒரு மாற்றத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்வார். 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான வாழ்வா சவாவா ஆட்டத்தில் இப்படி ஒரு காரியத்தை தான் தோனி செய்வார்.

தோனியின் மகத்துவம்
இதே போன்ற சூழலில் தோனி பந்தை எறியமால் வேகமாக ஓடி வந்து ரன் அவுட் செய்துவிடுவார். அதற்கு காரணம், கையுறை அணிந்து பந்தை எறியும் போது 10 க்கு 9 முறை, அது ஸ்டம்பை அடிக்காது. ஆனால் ஓடி வந்த ரன் அவுட் செய்து இருந்தால், நிச்சயம் அட்டமிழக்க வைக்கலாம். தோனியின் ஒரு புத்திசாலித்தனம், அன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தது.

பண்ட் சொதப்பல்
மேலும், பேட்டிங்கில் ரிஷப் பண்ட் ஒரு அதிரடி வீரராக அறியப்பட்டவர். நேற்றைய போட்டியில் கூட 3 பவுண்டரிகள் விளாசினார். ஆனால் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் 13 பந்தில் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் நிலைத்து நின்று விளையாடாமல் ஆட்டமிழப்பதும், இந்திய அணியின் பேட்டிங் சறுக்கலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











