
தைரியமாக இருக்கிறார்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கில்கிறிஸ்டிடம் இருவரில் யார் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் யோசிக்காமல் சற்றென்று ரிஷப் பண்ட் அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று கூறினார். ரிஷப் பயமே இன்றி தைரியமாக விளையாடுகிறார்.

இருவருக்கும் வாய்ப்பு
பந்துகளை அவர் அடித்து ஆடும் விதம் பிரமிப்பை ஊட்டுகிறது. இந்திய அணியில் கண்டிப்பாக அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் .ஆனால் என்னைப் பொறுத்தவரை இரண்டு பேரையுமே அணியில் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இரண்டு பேரும் இணைந்து விளையாடினால் நிச்சயம் அது அணிக்கு உதவும் .

கார்த்திக் பண்முகம் கொண்டவர்
தினேஷ் கார்த்திக் டாப் ஆர்டரில் பலமுறை விளையாடியிருக்கிறார். இதே போன்று நடு வரிசையிலும் ஆட்டத்தின் இறுதி கட்டத்திலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் பன்முகம் கொண்டவர். இதனால் இரண்டு பேருமே வைத்து அணியில் விளையாடுவது இன்னும் சிறப்பான விஷயமாக அமையும் என்று கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட்
51 டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் இதுவரை 598 ரன்கள் குவித்துள்ளார். இதில் சராசரியாக 27 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் 139 என்று அளவில் உள்ளது. அதேவேளையில் ரிஷப் பந்த் 58 டி20 போட்டியில் விளையாடி 934 ரன்கள் இந்திய அணிக்காக அடித்திருக்கிறார். ஆனால் அவருடைய சராசரி வெறும் 24 என்ற அளவில் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட்டும் 126 என்ற அளவில் இருக்கிறது. இதனால் அனுபவரீதியாகவும் ஸ்டிரைக் ரேட் ரீதியாகவும் தினேஷ் கார்த்திக் தான் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications