Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேவையில்லாத ஆணியா ரிஷப் பண்ட்.. பயிற்சி ஆட்டத்தில் சொதப்பல்.. பிளேயிங் லெவனில் இடம் சந்தேகம்

பெர்த் : டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தார்.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரிஷப் பண்ட் , கேஎல் ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

இதே போன்று முதல் ஓவரில் ரிஷப் பண்ட் சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.

9 ரன்கள்

9 ரன்கள்

ஆனால், அதன் பிறகு, பந்துகளை தொடவே சிரமப்பட்ட ரிஷப் பண்ட் 9 ரன்களில் வெளியேற, இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இதே போன்று முதல் பயிற்சி ஆட்டத்திலும் ரிஷப் பண்ட் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். அப்போது 16 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களில் வெளியேறினார்.

நட்சத்திர வீரர்

நட்சத்திர வீரர்

இதனால் ரிஷப் பண்ட்டை எதற்காக ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி நிர்வாகம் அழைத்து சென்று உள்ளது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழந்துள்ளது. ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் போஸ்டர் பாயாக (நட்சத்திர வீரராக) விராட் கோலி இருந்தார். அந்த இடத்தை ரிஷப் பண்ட் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இடமில்லை

இடமில்லை

ஆனால் தற்போது டெஸ்ட்டில் காட்டிய திறமையை டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் பண்ட் காட்ட திணறி வருகிறார். இதனால் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் இருக்க மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் தினேஷ் கார்த்திக்கின் இடம் உறுதியாகி விட்டது. இதனால் இந்திய அணி 5 பேட்ஸ்மேன், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், 2 சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்ற கட்டமைப்பில் களமிறங்க வாய்ப்புள்ளது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

ரிஷப் பண்ட்க்கு பதில் சஞ்சு சாம்சன் இல்லை ஸ்ரேயாஸ் ஐயரையாவது அணியில் சேர்த்து இருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த செயல்பாடுகளையும் மீறி ரோகித் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து பிளேயிங் லெவனில் சேர்த்தால், அது மிகப் பெரிய ரிஸ்க்காக அமையும். இல்லை ரிஷப் பண்ட்க்கு வேறு ஏதாவது பிரச்சினையா என்று அணியின் சீனியர்கள் கண்டறிந்து அவரை சரி செய்ய வேண்டும்.

Story first published: Thursday, October 13, 2022, 19:24 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+